வாக்குச்சாவடி மையங்களில் பொதுப்பார்வையாளர் நேரில் ஆய்வு
2 Apr 2026, 5:30 am

வாக்குச்சாவடி மையங்களில் பொதுப்பார்வையாளர் நேரில் ஆய்வு

குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் பிரியங்கா பாசு, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலிமார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பாலிமார் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார். வாக்களிக்கும்போது அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கேட்டுக் கொண்டார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சுபீர் நந்தா, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபுரம், தோப்பூர் மற்றும் ராஜாவூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.