தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் 

10 Feb 2026, 4:50 pm
வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் 
<p><strong>வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல்&nbsp;</strong></p> <p>டாக்கா, பிப்.10- வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடை பெறவுள்ள 13-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் நீண்டகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த &lsquo;ஜூலை கிளர்ச்சிக்குப்&rsquo; பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் களமாக இது பார்க்கப்படுகிறது. இரு வரலாற்று எழுச்சிகளுக்கு உரிமை கோரும் கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய சக்திகளான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ- இஸ்லாமி (JeI) ஆகிய இரு கட்சிகளும், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போர் மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி ஆகிய இரண்டிற்கும் தாங்க ளே உண்மையான அரசியல் வாரிசுகள் என்று உரி மை கோரி வருகின்றன. தேசிய அளவில் ஒளிபரப்பப் பட்ட உரையில் பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மான், தனது தந்தை ஜியாவுர் ரஹ்மானின் விடுதலைப் போர் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். பி.என்.பி-யின் மன்னிப்பு கோரலும் புதிய வாக்குறுதிகளும் தாரிக் ரஹ்மான் தனது உரையில் ஒரு முக்கிய நகர்வாக, கடந்த காலங்களில் பி.என்.பி ஆட்சியில் இருந்தபோது இழைக்கப்பட்ட தவறுகளுக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். &ldquo;தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காக வருந்துகிறேன்&rdquo; என்று குறிப்பிட்ட அவர், இம்முறை ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அதிகாரத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், ஜமாத் கட்சியின் பழமைவாதப் போக்கிற்குத் தங்களது கட்சி ஒரு மாற்றாக இருக்கும் எனவும் உறுதியளித்தார். ஜமாத் கட்சியின் புதிய அரசியல் முகம் விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, தற்போது ஒரு புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெ டுத்துள்ளது. &ldquo;1971-இல் பாகிஸ்தான் இழைத்த பாகு பாட்டிற்கு எதிராகப் போராடியது போலவே, 2024-இல் &nbsp;ஹசீனா அரசு இழைத்த அடக்குமுறைக்கு எதிராக வும் போராடினோம். எனவே, இந்த இரண்டு வர லாற்றுத் தருணங்களின் மரபுகளும் எங்களுக்கே உரியது&rdquo; என்று அக்கட்சியின் தலைவர் முகமது ஃபக்ருல் இஸ்லாம் வாதிடுகிறார். அவாமி லீக் மீதான தடை மற்றும் விமர்சனங்கள் நாட்டின் ஒரு பெரும் அரசியல் சக்தியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இத்தேர்தலில் போட்டியிட இடைக்கால அரசால் தடை விதிக்கக் பட்டுள்ளது. கடந்த கால வன்முறைகளைக் காரணம் காட்டி விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை அவாமி லீக் தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு பெரும் மக்கள் ஆதரவு கொண்ட கட்சியைப் புறக்க ணித்துவிட்டு நடத்தும் இந்தத் தேர்தல் முழுமையான ஜனநாயகமாகாது என்றும், இது தற்போதைய ஆட்சி யாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உண்மையில் இக்கட்சி யின் நிறுவனரான ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான், வங்கதேச விடுதலைப் போரின் நாயகன். அவரே வங்கதேசத் தந்தை எனப் போற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் மற்றும் பொது வாக்கெடுப்பு பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந் தெடுப்பதோடு மட்டுமல்லாமல், புதிய அரசியலமை ப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொது வாக்கெ டுப்பும் (Referendum) நடைபெறவுள்ளது. அவாமி லீக் இல்லாத நிலையில், பி.என்.பி மற்றும் ஜமாத் இடையேயான இந்த நேரடிப் போட்டி வங்கதேச அரசியலில் ஒரு புதிய சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.