ஜென் ஸி 27 வயதான குன்கி சவுத்திரி
27 Mar 2026, 3:15 pm
<p>ஜென் ஸி 27 வயதான குன்கி சவுத்திரி, தன்னை ஒரு ஜென் ஸிக்கான வேட்பாளராக முன்னி றுத்துகிறார். அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள அசாம் ஜாதிய பரிஷத் கட்சி சார்பில் மத்திய குவஹாத்தி தொகுதியில் அவர் போட்டி யில் உள்ளார். தற்போது நடைபெறும் தேர்தலில் அவர்தான் மிக இளம் வயது வேட்பாளராவார். காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) ஆதரவுடன் களமிறங்கியுள்ள இவர், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய்குமார் குப்தாவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறார். அரசின் சாதனை விளக்கங்கள் ஒரு புறம், மறுபுறத்தில் யதார்த்தம் நிலைமை வேறாக இருக்கிறது என்ற அவரது பிரச்சாரம் பாஜகவால் எதிர்கொள்ள முடியாததாக உள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி என்பதால், கடந்த கால தேர்தல் முடிவுகளை வைத்து கணக்குப் போட முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.</p>
