தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

27 Mar 2026, 3:15 pm
தொழில்நுட்ப கதிர்

ஜெமினியில் பிற ஏஐ செயலிகளில் இருந்து உரையாடல்களை பகிரும் அம்சம்!

கூகுள் ஜெமினி (Gemini) ஏஐ தளத்தில், சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் கிளாட் (Claude) போன்ற பிற ஏஐ செயலிகளில் இருந்து உங்கள் பழைய உரையாடல்கள் மற்றும் தகவல்களை (Memory) எளிதாகப் பரிமாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜெமினியில் பயனர்கள் புதிதாக ஒரு உரையாடலை தொடங்க தேவையில்லை; பிற ஏஐ செயலிகளிடம் இருந்து ஏற்கெனவே பகிர்ந்துள்ள பயனர்களின் விருப்பங்கள் (Preferences), தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வேலை தொடர்பான தகவல்களை கொண்டு பணிகளை எளிதாக முடிக்க ஜெமினி ஏஐ உதவி செய்கிறது.  ஏஐ மெமரி-ஐ மாற்றுவது எப்படி: •ஜெமினி இணையதளத்தில் Settings பகுதிக்குச் சென்று ‘Import memory to Gemini’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். • அங்கே ஜெமினி ஒரு குறிப்பிட்ட ‘Prompt’-ஐ கொடுக்கும். அதை அப்படியே Copy செய்து உங்கள் பழைய ஏஐ செயலியில் (உதாரணமாக ChatGPT) பேஸ்ட் செய்யவும். • அந்தச் செயலி உங்களைப் பற்றிய தகவல்களை ஒரு தொகுப்பாக வழங்கும். அதை மீண்டும் Copy செய்து ஜெமினியில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து ‘Add memory’ என்பதைக் கிளிக் செய்யவும். சாட் வரலாறு-ஐ மாற்றுவது எப்படி: • முதலில் உங்கள் பழைய ஏஐ செயலியின் (ChatGPT அல்லது Claude) செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று உங்கள் தரவுகளை (Data Export) டவுன்லோட் செய்யவும். இது ஒரு .zip கோப்பாக இருக்கும். • ஜெமினி செட்டிங்ஸில் உள்ள ‘Import chats’ பகுதிக்குச் சென்று அந்த zip File-ஐ அப்லோட் செய்யவும். • ஒரு நாளைக்கு 5 ஜிபி வரை  அளவுள்ள 5 zip File-களை  பயனர்கள் பதிவேற்ற  முடியும்.

வாட்ஸ்அப்பில் ஐபோன் பயனர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில், ஒரே போனில் இரண்டு கணக்குகள், ஸ்டோரேஜ் மேனேஜ்மென்ட், சாட் டிரான்ஸ்பர், மெட்டா ஏஐ உள்ளிட்ட வசதிகளை ஐபோன் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். 1. ஒரே ஐபோனில் இரண்டு கணக்குகள் (Multi-account Support) இனி ஐபோன் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வேலை மற்றும் தனிப்பட்ட தொடர்புகளைத் தனித்தனியாகப் பராமரிப்பது எளிதாகும். ஆண்ட்ராய்டு போன்களில் ஏற்கெனவே இருந்த இந்த வசதி இப்போது ஐபோன்களுக்கும் வந்துள்ளது. 2. ஸ்டோரேஜ் மேனேஜ்மென்ட் (Storage Management) முழு சாட்களையும் (Chat) அழிக்காமலேயே, தேவையற்ற பெரிய கோப்புகளை (Large Files) மட்டும் கண்டறிந்து நீக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் Storage-ஐ எளிதாகச் சேமிக்கலாம். மேலும், மெசேஜ்களை மட்டும் வைத்துக்கொண்டு மீடியா கோப்புகளை (Photos/Videos) மட்டும் நீக்கும் வசதியும் உண்டு. 3. தளங்களுக்கு இடையேயான சாட் டிரான்ஸ்பர் (Cross-platform Chat Transfer) ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கும், ஆண்ட்ராய்டிலிருந்து ஐபோனுக்கும் இனி எளிதாக வாட்ஸ்அப் சாட்களை மாற்றிக்கொள்ளலாம்.  4. மெட்டா ஏஐ (Meta AI) வசதிகள் மெட்டா ஏஐ மூலம் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கவும், பின்னணியை (Background) மாற்றவும் முடியும். அதுமட்டுமின்றி, உரையாடலின் சூழலைப் புரிந்து கொண்டு, அதற்குப் பதில் அளிக்க உதவும் வகையில் AI மூலம் தானாகவே மெசேஜ் பரிந்துரைகளை (Suggested responses) இந்த வசதி வழங்கும். 5. ஸ்மார்ட் ஸ்டிக்கர்கள் (Smarter Stickers) பயனர்கள் டைப் செய்யும் ஈமோஜிகளுக்கு (Emoji) ஏற்றவாறு பொருத்தமான ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் இனி பரிந்துரைக்கும்.  இந்த அப்டேட்கள் தற்போது படிப்படியாக பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. விரைவில் அனைத்து ஐபோன் பயனர் களுக்கும் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.