தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

20 Mar 2026, 2:55 pm
தொழில்நுட்ப கதிர்

மேக் பயனர்களுக்கு  ஜெமினி ஏஐ செயலி - கூகுள் திட்டம்

மேக் ஓஎஸ் (macOS) பயனர்களுக்காக, ஒரு பிரத்யேக ஜெமினி ஏஐ செயலியை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  இதுவரை ஜெமினி ஏஐ பெரும்பாலும் இணைய ப்ரவுசர் (browser) வழியாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இனி நேரடியாக மேக் கணினிகளில் செயலியாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய செயலி தற்போது சோதனை (beta) கட்டத்தில் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களிடம் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஜெமினி மேக் செயலியில், படங்கள், வீடியோ, இசை, அட்டவணைகள் மற்றும் வரைபடங்களை உருவாக்குவதுடன், கணிதச் சிக்கல்களைக் கையாளுதல் மற்றும் தகவல் பகுப்பாய்வு ஆகியவையும் இதில் அடங்கும். இந்தச் செயலி இணையத்தில் தேடவும், கடந்த கால உரையாடல்களை மீள்பார்வை செய்யவும், பதிவேற்றப்பட்ட கோப்புகளைப் பகுப்பாய்வு செய்யவும் முடியும்.  பயனர்களின் திரையில் காணப்படும் தகவல்களை புரிந்து கொண்டு “screen awareness”, அதற்கேற்ப உதவிகளை வழங்கும் அம்சங்களை இந்த செயலி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தினசரி பணிகளை மேலும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடியும். மேலும், இந்த செயலி ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி மற்றும் ஆந்திரோபிக் நிறுவனத்தின் கிளாட் போன்ற ஏஐ செயலிகளுக்கு  போட்டியாக கொண்டுவரப்பட  உள்ளது.

கூகுள் ஃபைண்ட் ஹப் மூலம் தொலைந்த லக்கேஜை கண்டுபிடிக்கும் அம்சம்!

கூகுள் நிறுவனம், ஃபைண்ட் ஹப் (Find Hub) என்ற பொருட்களின் இருப்பிடத்தை டிராக் (location-tracking) செய்ய உதவும் செயலியாகும்.  இது, முன்பு இருந்த ஃபைண்ட் மை டிவைஸ் (Find My Device) போன்ற சேவைகளின் மேம்பட்ட வடிவமாக கருதப்படுகிறது. ஃபைண்ட் மை டிவைஸ் செயலி மூலம், உங்கள் phone, tablet, earbuds போன்றவை தொலைந்தால் அவற்றை கண்டுபிடிக்க உதவுகிறது. தற்போது, Find Hub-இல் தொலைந்த லக்கேஜை (luggage) எளிதாக கண்டுபிடிக்கும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.  இதில், பயணிகள் தங்கள் பையில் இணைக்கப்பட்ட Find Hub tag அல்லது network accessory-இன் இடத்தை (location) விமான நிறுவனத்துடன் பாதுகாப்பாக பகிர முடியும். இதற்கு, 1.    Find Hub செயலியில் “share item location” என்பதைத் தேர்வு செய்யவும். 2.    தனிப்பட்ட, பாதுகாப்பான URL உருவாகும். 3.    அந்த URL-ஐ விமான நிறுவனத்தின் செயலி அல்லது website-இல் paste செய்தால், அவர்கள் லக்கேஜை இடத்தை நேரடியாகக் காண முடியும். 4.    பயனர் எப்போது வேண்டுமானாலும் sharing-ஐ நிறுத்தலாம். இந்த செயலியில், பயனரின் இருப்பிட (device location) தரவுகள் சேமிக்கப்படுகிறது. பகிரப்பட்ட லிங்க் 7 நாட்களில் தானாகவே காலாவதியாகும். லக்கேஜை பயணிகள் கண்டறிந்தவுடன் இருப்பிடம் பகிர்வு தானாகவே நிறுத்தப்படும். ஏர் இந்தியா, லுஃப்தான்சா குழுமம், சைனா ஏர்லைன்ஸ், சவுதியா ஏர்லைன்ஸ், ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ், டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உலகளாவிய விமான நிறுவனங்கள் ஃபைண்ட் ஹப் மூலம் லக்கேஜை கண்டுபிடிக்கும் வசதி வழங்குகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.