ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: காவல்துறை அலட்சியம் கண்டிக்கத்தக்கது கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
27 Sept 2026, 8:52 pm

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: காவல்துறை அலட்சியம் கண்டிக்கத்தக்கது

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கடலூர், செப். 27 –ஜெம் கிரானைட் நிறுவன அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்தும், கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்துச்சம்பவங்கள் குறித்தும் முழுமையான விசாரணை கோரியும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகரச் செயலாளர் ஆர். அமர்நாத் தலைமை வகித்த இக்கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ் ணன் சிறப்புரையாற்றினார்.

காவல்துறை அலட்சியமும் நீதிமன்ற உத்தரவும்அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துபேசிய அவர், சிறுமிகள் மீதானபாலியல் கொடுமைகள் தொடர்பாகப் பல ஆண்டுகளாகச் சம்பவங்கள் நடைபெற்ற தாகக் கூறப்படும் நிலையில்,காவல்துறை மற்றும் உளவுத் துறை ஏன் முன்கூட்டியே கண்டறியவில்லை என கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டிலேயே காவல்துறை அதிகாரியிடம் புகாரும்,பென் டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களும் வழங்கப் பட்டிருந்தும், உரிய நட வடிக்கைஎடுக்கப்படாதது ஏன் என அவர் வினவினார்.குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை எனக் காவல்துறை தாக்கல் செய்த முடிவறிக்கையை ஏற்க மறுத்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி பத்மா மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.இந்த விவகாரத்தில்திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வதை விடுத்து, சிறுமிகளின் பாதுகாப்பிற்குத் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தஅனைவரும் தங்களுக்கான பொறுப்பைச் சுயவிமர்சனத்து டன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. உதயகுமார், ஆர். ராமச்சந்திரன், வி. சுப்புராயன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, வழக்கில்தொடர்புடையவர்கள் மற்றும்தகவல்களை மறைத்தவர்கள்மீது எந்தவித அரசியல் தலையீடும் இன்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்திச் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.