தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெம் வீரமணியால் மகள் தற்கொலை : 10 ஆண்டுகளுக்குப் பின் தாய் புகார்

27 Sept 2026, 9:12 pm
ஜெம் வீரமணியால் மகள் தற்கொலை : 10 ஆண்டுகளுக்குப் பின் தாய் புகார்

ஜெம் வீரமணியால் மகள் தற்கொலை : 10 ஆண்டுகளுக்குப் பின் தாய் புகார்

சென்னை, செப்.27 -ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணியால், 16 வயது மகள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக, பத்து ஆண்டுகளுக்குப் பின் தாய் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், 4 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

புகார் மனுவின்படி, 2016 ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பு படித்த தனது மகளுக்கு கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி வீரமணியுடன் அறிமுகம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தி வீரமணி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தாய் தெரிவித்துள்ளார். அப்போது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், வீரமணியின் செல்வாக்கு காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல் நிலையம் தீக்கிரையானதால் ஆவணங்கள் அழிந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மற்ற சிறுமிகளும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்என உயிரிழந்த சிறுமியின் தாய் கோரியுள்ளார். பள்ளி ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.(மனஉளைச்சல் தொடர்பான உத விக்கு: தமிழ்நாடு அரசு ஹெல்ப்லைன் 104, சிநேகா தொண்டு நிறுவனம் +91 442464 0050 / 2464 0060.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.