தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் போலீசாரையும் இணைத்திடுக!

23 Sept 2026, 11:19 pm
‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில்  போலீசாரையும் இணைத்திடுக!

‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் போலீசாரையும் இணைத்திடுக!

மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, செப். 23 –ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் தொடர்பான போக்சோ வழக்கில் சிறுமிகள்பாதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துவதாகவும், மேலும் பல சிறுமிகள்பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவ்வழக்கின் உண்மைகள் முழுமையாக வெளிக் கொணரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தலைவரால் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொலியுடன் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி காவல்துறைக்குத் தகவலும்ஆதாரமும் அளிக்கப்பட்டு இருப்பதையும், மறுநாளான அக்டோபர் 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படியிருக்க, குழந்தை யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி இவ்வளவு முக்கியமான போக்சோ வழக்கில்அடுத்தடுத்தநடவடிக்கைகள் ஏன்தீவிரமாக மேற்கொள்ளப்பட வில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வர்களின் சமூக அந்தஸ்து, பணபலம் மற்றும்அதிகாரத்திற்கு அடிபணியாமல் காவல்துறை பாரபட்சமின்றி செயல்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி களின் அடையாளம் பாதுகாக்கப்ப டுவதோடு, அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும்முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்என்றும், தமிழக அரசு இந்த வழக்கை விரைந்து விசாரித்துச் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.