முந்தய பக்கம்

‘ஜெம்’ வீரமணி வீடுகளில் ஆவணங்கள் பறிமுதல்!

24 Sept 2026, 9:43 pm
‘ஜெம்’ வீரமணி வீடுகளில் ஆவணங்கள் பறிமுதல்!

‘ஜெம்’ வீரமணி வீடுகளில் ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை, செப். 24 -‘ஜெம்’ கிரானைட்ஸ் வீரமணிக்குச் சொந்தமான 5 இடங்களில் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில்செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ‘ஜெம் கிரானைட்’ தொழில் அதிபர் வீரமணி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியகுற்றத்திற்காக ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரதுஇந்த கொடூர குற்றத்திற்குத் துணை போனதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன்,வீடியோவைச் செல்போனில் வைத்திருந்த கணேசன் உட்பட இதுவரை நான்கு பேர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2 பேர் ஜாமீன் கோரி மனு

இதனிடையே, கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும், தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனவும், தாங்கள் கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை தங்களைக் காவலில் எடுத்துப் போலீசார் விசாரிக்கவில்லை எனக் கூறி, சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram