தீக்கதிர் செய்தி எதிரொலி… கெடிலம் அணுகுசாலையில் சரி செய்யப்பட்ட மின்விளக்குகள்
yesterday
<p><strong> தீக்கதிர் செய்தி எதிரொலி… கெடிலம் அணுகுசாலையில் சரி செய்யப்பட்ட மின்விளக்குகள்</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் அணுகுசாலை மேம்பாலத்தின் கீழ் போதிய மின் விளக்கு வசதி இல்லாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருந்த தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாண வர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை இருந்தது. இது குறித்த செய்தி ‘தீக்கதிர்’ நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, மக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உடனடியாக மின்விளக்கு களைப் பராமரித்துச் சரிசெய்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட ‘தீக்கதிர்’ நாளிதழுக்கும் தங்களது நன்றி யைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.</p>
