தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026-27 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதம் வரை இருக்கும்! பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு

29 Jan 2026, 3:04 pm
2026-27 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதம் வரை இருக்கும்! பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு
<p><strong>2026-27 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவிகிதம் வரை இருக்கும்! பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு</strong></p> <p>புதுதில்லி, ஜன. 29 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவரின் உரையுடன் புதன்கிழமையன்று துவங்கிய நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் &nbsp;பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று (ஞாயிற்றுக் கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. &nbsp;தொடர்ந்து 9-ஆவது முறையாக ஒன்றிய &nbsp;நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட் ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்தாண்டில் இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த தரவுகளைக் கொண்டதாக இந்த ஆய்வறிக்கை இருக்கும். அதன்படி, 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை யில் வியாழனன்று தாக்கல் செய்தார். &nbsp;இந்த அறிக்கையில், 2025&ndash;26 பொருளா தார ஆய்வறிக்கையின் படி, இந்திய பொரு ளாதாரம் தொடர்ந்து சிறப்பாக வளர்ந்து &nbsp;வருவதாகவும், இந்த வளர்ச்சி 2026&ndash;27 நிதி யாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக் கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகிதம் முதல் 6.8 சதவிகிதம் என கணிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2026- 27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.8 முதல் &nbsp;7.2 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. &nbsp;அதேபோல 2027-ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொரு ளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. எனினும், பொருளாதார ஆய்வறிக்கை யில் ரூபாயின் மதிப்பு கடந்த 2025ம் ஆண்டில் மோசமாக செயல்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 825.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி யுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.1 சத விகிதம் வளர்ச்சியாகும். 2026ஆம் ஆண்டு ஜனவரி 16 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 701.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித் துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.