தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: காசாவில் தொற்றுநோய் அவசரநிலை அறிவிப்பு!

19 minutes before
மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: காசாவில் தொற்றுநோய் அவசரநிலை அறிவிப்பு!

மூளைக்காய்ச்சல் (Meningitis) பாதிப்பு அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, காசாவின் அனைத்துப் பகுதிகளிலும் தொற்றுநோய் அவசரநிலையை அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பொதுச் சுகாதாரத்துறையின் முதன்மை சுகாதாரப் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் நிடால் குனைம் கூறுகையில், வழக்கமாக மாதம் 30 முதல் 50 வரை பதிவாகும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு, கடந்த அக்டோபரில் 272 ஆக உயர்ந்துள்ளது. இது வழக்கமான பாதிப்பைவிட எட்டு மடங்குக்கும் அதிகமாகும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் மூளைக்காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, காசாவில் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு (WHO), யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது, நிவாரண முகாம்களில் மக்கள் நெருக்கடி, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவையே இந்த நோய்த்தொற்று பரவலுக்குக் காரணமாக இருந்தாலும், குடிநீர் சுத்திகரிப்புப் பொருட்கள், பராமரிப்புக்கான உதிரிபாகங்கள், எரிபொருள் ஆகியவற்றை இஸ்ரேல் அனுமதிக்க மறுப்பதே இந்தத் தொற்றுநோய் பரவலுக்கு நேரடிக் காரணம் என்று காசா சுகாதாரத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.