தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காயத்ரி மந்திரமும் கார் கண்ணாடியும் - எஸ்.எம்.இராஜகோபால்

9 Nov 2025, 2:42 pm
காயத்ரி மந்திரமும்  கார் கண்ணாடியும் - எஸ்.எம்.இராஜகோபால்
<p><strong>காயத்ரி மந்திரமும் &nbsp;கார் கண்ணாடியும்</strong></p> <p>இன்றைக்கு காலை யில் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. &nbsp;பக்கத்து வீட்டு போர்டி கோவுக்கு போய் &nbsp;அவர் கார் &nbsp;கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தேன். &nbsp;&ldquo; என்ன சார் ! என்ன பண்றீங்க&rdquo; என்றவாறே இராம்ஜி ஒரு துண்டை தோளில் போர்த்தியவாறு வெளியில் வந்தார். &nbsp;&ldquo;ஒன்னுமில்லே ! கார் &nbsp;ஸ்டார்ட் ஆகல்லே! ஒங்க &nbsp;கார் கண்ணாடியை அட் &nbsp;ஜஸ்ட் செய்து கொண்டி ருக்கிறேன்!&rdquo; &ldquo;என்ன சார்! ஜோக்க டிக்கிறீங்க?&rdquo; &ldquo;இதுல என்ன சார் ஜோக்கு இருக்கு? கண் ணாடி இருக்கே அது எதுக்க &nbsp;எது இருந்தாலும் அதை &nbsp;பிரதிபலிக்கும் இல்லையா? &nbsp;அது எப்படிங்கிறீங்க? உல கமே அந்த கண்ணாடிக் குள்ள இருக்கு... &nbsp;எதாவது ஒரு பொருள் &nbsp;எதிர இருந்தா உடனே கண்ணாடி அது இதானா பாத்துக்கோன்னு காமிக்கிறது... &ldquo; இராம்ஜி கொஞ்சம் கவ லையோடு என்னை பார்த்தார். &nbsp;&ldquo; இந்த கண்ணாடி யிலி ருந்து ஒரு வைப்ரேஷன் எப்போதும் பரவிகிட்டே இருக்கிறது ! &nbsp;இந்த வைப்ரே ஷன் உலகத்துல எல்லாத் &nbsp;தையும் சீர்படுத்தி வைக்கி றது. &nbsp;சுருக்கமா சொன்னா நீங்க கண்ணாடியை பாத்து தானே ஒங்க கலைஞ்சி போன தலையை சரி செஞ்சுக்கிறீங்க!&rdquo; &ldquo;அதனால&rdquo; &ldquo;அதனால ஒங்க கார் கண்ணாடியை சரி பண்ணிய ஒடனே அதுலேருந்து ஒரு வைப்ரேஷன் கிளம்பி அதாவது ஒரு காஸ்மிக் எனர்ஜி &nbsp;கிளம்பி என்னோட கார் கண்ணாடியை அடை கிறது. &nbsp;அந்த அதிர்வை அது &nbsp;உள்வாங்கி அப்படியே காரின் எல்லா பாகங்களை யும் சீர் செய்கிறது!&rdquo;.இப்போது இராம்ஜி மிகவும் வருத்தமாக ஆதுரத்துடன் என்னை பார்த்தார். &nbsp; &ldquo;சார்! இது ஒரு பிகினிங் &nbsp;ஸ்டேஜ்தான்! நல்ல சைக்கி யாட்ரிஸ்ட்ட பாத்தா உடனே &nbsp;சரி செஞ்சுடலாம்!&rdquo; என் றார். &ldquo;ரொம்ப பைத்தியக்கா ரத்தனமா இருக்குல்ல! நீங்க தான சார் &nbsp;நம்ப வாட்ஸப்பு &nbsp;குரூப்புல போட்டிருந்தீங்க! காயத்ரி மந்திரத்தை காலை யில சொல்லும்போது அப்ப டியே ஒரு வைப்ரேஷன் ஏற் &nbsp;பட்டு ஒரு காஸ்மிக் எனர்ஜி நம் உடல் மீது பரவுகிறது. &nbsp; அது நம் உறுப்புகளை நன்கு வைத்துக் கொள்வ தோடு மனதில் நல்ல மாற் றங்களை ஏற்படுத்துகிறது. &nbsp;அப்படியே வான்மண்ட லத்துல பரவி நம்மை பாதிக் &nbsp;கும் &nbsp;கிரகங்களை சீர் படுத்து கிறது. &nbsp;இப்படி நீங்க சொன்ன தெல்லாம் நடக்கும்னா நான் &nbsp;சொன்னது ஏன் சார் நடக் காது?&rdquo;. &ldquo;கஷ்ட காலம்&rdquo; என்ற வாறே இராம்ஜி போய்விட் டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.