விளையாட்டு
11 Oct 2026, 8:58 pm

விளையாட்டு

250 ரன்கள் ‘சேஸிங்’ விசயத்தை மூடிமறைக்க பிட்ச் மீது பழிபோட்டு சமாளிக்கும் கவுதம் கம்பீர்

இந்தியாவில் பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக பிட்ச்கள் (கிரிக்கெட் மைதான நடு பகுதி) அமைக்கப்படுவதாக இந்திய அணி யின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) மற்றும் மைதான நிர்வாகங்களுக்கு 2ஆவது முறையாக எச்சரிக்கை விடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அக்.9ஆம் தேதி இந்திய கிரிக்கெட் உலகிற்கு மறக்க முடியாத நாள். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டி-20 ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 120 பந்துகளில் (டி-20 ஓவர்கள்) 250 ரன்கள் இலக்கை எளிதாகத் துரத்திப் பிடித்து, அபார வெற்றிப்பெற்றுள்ளது. அதுவும் 9 பந்துகள் மீதம் வைத்து 252 ரன்கள் விளாசியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த அதிரடியை பார்த்து இந்திய ரசிகர்கள், “அய்யயோ.. என்ன இந்த அடி, அடிக்கிறாங்க!” என்று இன்னும் புலம்பிவருகின்றனர்.

இந்தப் போட்டியில் பந்துவீச்சா ளர்களின் சொதப்பலால்தான் இந்திய அணி படுதோல்வியடைந்தது என்பதை மறைக்கவும், வரலாற்றுத் தோல்வியை திசை திருப்பவும் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் பிட்ச் பகுதியை சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பு மற்றும் மிரட்டல் வேலையை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறு கையில், “இந்தியாவில் உள்ள தட்டையான பிட்ச்களால் இந்தியப் பந்துவீச்சாளர்களின் எதிர்காலம் கடுமையான ஆபத்தில் உள்ளது. பேட்டிங் - பந்துக்கும் இடையே நியாயமான மற்றும் சமமான போட்டி இருக்க வேண்டும். இல்லையெனில் அது உண்மையான கிரிக்கெட் விளையாட்டாக இருக்காது. பார்வையாளர்களைக் கவர்வதற்காகவும், அதிக சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை மையப்படுத்தியும் மைதானங்கள் செயல்படுவது கிரிக்கெட் விளையாட்டின் தூய்மையைக் கெடுத்துவிடும். அதனால் பந்துவீச்சாளர்களின் திறமையைப் பாதுகாக்கவும், இந்திய கிரிக்கெட்எதிர்காலத்தைக் காப்பாற்றவும் பிசிசிஐ உடனடியாக பிட்ச் தயாரிப்புகொள்கையில் திருத்தம் செய்து, சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் சமநிலையான பிட்ச்களை உருவாக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

வெற்றி என்றால் சிரிப்பு ; தோல்வி என்றால் கொதிப்பு

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கம்பீரிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளது. நல்ல ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றால் சிரிக்கிறார். நல்ல ரன்கள் குவித்து தோல்வியடைந்தால் பிட்ச் காரணம் என கூப்பாடு போட்டு கொதிக்கிறார். அவரது வேண்டுகோள் அல்லது உத்தரவுக்கு ஏற்ப பிட்ச் மாற்றம் செய்த பின்பு விக்கெட்டுகள் சரிந்து இந்திய அணி தோல்வியடைந்தால் பேட்டிங்கிற்கு ஏற்றவாறு, பிட்ச் பகுதியை மாற்றம் செய்ய சொன்னாலும் சொல்வார் போலும்.

ஷாங்காய் ஓபன் டென்னிஸ் : நாகஷிமா அவுட்

ஆடவருக்கு மட்டும் நடைபெறும் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் 14ஆவது சீசன் சீனாவில் (ஷாங்காய் நகரில்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில்16ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீரரான அமெரிக்கா வின் நாகஷிமா, தரவரிசையில் 19ஆவது இல்லாத கஜகஸ்தானின் பப்ளிக்கை எதிர்கொண்டார். முதல் செட்டில் மட்டுமே நாகஷிமா ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட் முழுவதும் நாகஷிமாவின் ஆட்டத்திறனை நன்றாக உற்றுநோக்கி, 2ஆவது செட் முதல் பப்ளிக் பதிலடி கொடுக்கஆரம்பித்துவிட்டார். இந்த அதிரடி ஆட்டத்தை நாகஷிமா எதிர்பார்க்கவில்லை. பப்ளிக்கின் சர்வீஸ்கள் அனல் பறந்தன. இறுதியில் 6-7 (7-9), 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அபார வெற்றிப் பெற்ற கஜகஸ்தானின் பப்ளிக்

4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற அமெரிக்காவின் நாகஷிமா அதிர்ச்சி தோல்வியுடன்வெளியேறினார்.

4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் :

ஜுவரேவ் (ஜெர்மனி), டி மினார் (ஆஸ்திரேலியா), மென்சிக் (செக் குடியரசு)