கௌரி கல்யாணம் - நாடக விமர்சனம்
9 Nov 2025, 2:42 pm
<p><strong>கௌரி கல்யாணம்</strong></p>
<p>சங்கு ஐயர் ஒரு சமையல்காரர் தன்னலம் கருதாமல் எல்லோருக்கும் தன்னாலான உதவி களை எப்பொழுதும் செய்வார்.சங்கு அய்யரின் சமையலை புகழ்ந்து பாராட்டிய மூன்று பணக்காரர்கள் அவர் பெண் கௌரியின் கல்யாணத்திற்கு பணம் தந்து உதவுவதாக வாக்களிக்கிறார்கள்.ஆனால் அவர் தனது பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிய பின்னர் அவர்களிடம் சென்று பண உதவி கேட்ட பொழுது கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.அந்த நிலையில் தன்னலம் கருதாமல் அவர் செய்த உதவியால் பலனடைந்த பலரும் அவரோடு சமையல் வேலையில் பணிபுரிந்த பலரும் அவருக்கு பொருள் உதவி செய்து கௌரி கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்கள்.தன்னலம் கருதாத மனித ஒற்றுமையால் எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என்ற சிறப்பான கருத்தை நாடகம் வலியுறுத்துகிறது. தீக்கதிர் நாளிதழில் சிறுகதையாக வந்த கார்த்தி கேயனின் இந்த சிறுகதை நாடகமாக்கப்பட்டு மயி லாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது .நாடகத்திற்கு கதை வசனத்தை கார்த்தி கேயன் எழுதியிருந்தார். நாடகத்தை அஜய் என்டர் பிரைசஸ் மல்லிக்ராஜ் அவர்கள் இயக்கியிருந்தார். இழைகள் பின்னி இணைவதனால் ஏற்ற சேலை கிடைக்குது வண்ணங்களின் கூட்டுறவால் வானவில் கண்பறிக்குது விதவிதமாய் பறவைகளால் வேடந்தாங்கல் சிறக்குது மனிதர்களின் ஒற்றுமையால் கௌரி கல்யாணம் நடக்குது என்ற கவிஞர் வல்லம் தாஜ்பாலின் கவிதை வரிகளுடன் நாடகம் முடிவது ரசிகர்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.</p>
