தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பான் கார்டு, வாக்காளர் அட்டை மட்டும் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியாது : கவுகாத்தி உயர்நீதிமன்றம்

13 Nov 2026, 10:33 pm
பான் கார்டு, வாக்காளர் அட்டை மட்டும் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியாது : கவுகாத்தி உயர்நீதிமன்றம்

பான் கார்டு, வாக்காளர் அட்டை மட்டும் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியாது : கவுகாத்தி உயர்நீதிமன்றம்

கவுகாத்திபாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் டராங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்ச்சன் பேகம். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் என்று அம்மாநில அரசு (1971-க்குப் பிறகு இந்தியா

வில் நுழைந்தவர் என்று கூறி) அறிவித்தது. இந்த உத்தரவு மற்றும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குல்ச்சன் பேகம் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைதாக்கல் செய்தார்.

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்குவந்தது. குல்ச்சன் பேகம் தனது குடியுரிமையை நிரூபிக்க, 1966 மற்றும் 1970ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்கள், தனது தந்தையின் பான் கார்டு, வாக்காளர் அட்டை, தனது சொந்த வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, 2018 வாக்காளர் பட்டியல் மற்றும் தேசிய குடிமக்கள்

பதிவேட்டு விண்ணப்பத்துக்கான ஒப்புகைச் சீட்டு ஆகியவற்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், வாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கல்யாண் ராய் சுரானா, சுஸ்மிதா புகான் கவுந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு,”மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட பான் கார்டும், வாக்காளர் அடையாள அட்டையும் குடியுரிமைக்கான சான்று அல்ல.இவை வருமான வரித்துறை மற்றும் இந்தியத்தேர்தல் ஆணையத்தால் எத்தகைய விசாரணையும் இன்றி, சுய விண்ணப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் ஆவணங்களாகும். எனவே, பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை ஆதரிக்கும் பதிவுகள் நிரூபிக்கப்படாத வரை, சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆவணங்களை இந்தியக்குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாது.மனுதாரரின் தந்தை என்று கூறப்படுபவர் மக்களவைத் தேர்தல் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில்போட்டியிட்டார் என்பதும், அவர் கவுகாத்தி மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினராக இருந்தார்என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த நபருடன் மனுதாரருக்குத் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கப்போதுமான ஆதாரம் இல்லை” என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.