போரினால் மேற்கு மாவட்டங்களில் எரிவாயு தட்டுப்பாடு முடங்கும் தொழில் கூடங்கள்... திணறும் சமையலறைகள்
10 Mar 2026, 3:51 pm

போரினால் மேற்கு மாவட்டங்களில் எரிவாயு தட்டுப்பாடு முடங்கும் தொழில் கூடங்கள்... திணறும் சமையலறைகள்

கோவை/சேலம், மார்ச் 10- மத்திய கிழக்கு நாடுகளில் மூண்டுள்ள போர் மேகங் கள், தமிழகத்தின் தொழில் நகரங்களில் அடுப்பு நெருப்பை அணைக்கத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் தட்டுப் பாடு மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுத்தம் காரண மாக, தமிழகத்தின் தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. ‘கேஸ் கட்டிங்’ - ‘ஹீட்டிங்’ பணிகள் கடும் பாதிப்பு தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோவையில், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் ஜாப் ஆர்டர் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன. ‘கேஸ் கட்டிங்’ மற்றும் ‘ஹீட்டிங்’ பணிகளுக்கு எரிவாயுவே பிரதானம் என்பதால், முதல்கட்டப் பணிகளே முடங்கியுள்ளன. இதனால், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாமல், பல கோடி ரூபாய் அபராதம் செலுத் தும் நிலைக்குத் தொழில்முனைவோர் தள்ளப்பட்டுள்ளனர். ஹோட்டல் உணவு வகைகள் குறைப்பு ஏற்கெனவே மார்ச் 1 முதல் வணிக சிலிண்டர் விலை ரூ. 2015 ஆக உயர்ந்த அதிர்ச்சியில் இருந்த உணவக உரிமையாளர் களுக்கு, தற்போது சிலிண்டர் விநியோக நிறுத்தம் அடுத்த இடி யாக இறங்கியுள்ளது. கோவை மற்றும் சேலத்தில் பல உண வகங்களின் உணவுப் பட்டியலில் இடம்பெறும் உணவு வகை கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களே மூடப்படும் அபா யம் ஏற்பட்டுள்ளது. வெள்ளித் தொழில் மற்றும் வார்ப்புத் தொழில்கள் நிறைந்த சேலம் மாவட்டத்தில், தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. “மார்ச் 15-க்குப் பிறகு வணிக சிலிண்டர்கள் முழுமையாகக் கிடைக்காது” என சிலிண்டர் ஏஜென்சிகள் கைவிரித்துள்ள செய்தி, வியாபாரி களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. முன்பதிவுக்கான ஐவிஆர்எஸ் எண்கள் திடீர் முடக்கம் இதேபோன்று, வணிகப் பயன்பாடு மட்டுமன்றி, சாதாரண பாமர மக்களின் வீட்டுச் சமையலறைகளும் முடக்கப்பட்டு உள்ளன. கோவையில் இண்டேன், பாரத், ஹெச்.பி ஆகிய நிறுவனங்களின் ஐவிஆர்எஸ் (IVRS) எண்கள் திடீரென முடங்கியுள்ளன. சிலிண்டர் புக் செய்ய முயலும் வாடிக்கையாளர்களுக்கு “எண் பயன்பாட்டில் இல்லை” என்ற பதிலே கிடைக்கிறது. நேரடியாக ஏஜென்சிகளைத் தொடர்பு கொண்டால், முந்தைய சிலிண்டர் வாங்கி 25 நாட்களுக்கு மேல் ஆனவர்களுக்கு மட்டுமே புதிய புக்கிங் அனுமதி வழங்கப்படுகிறது. இதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதால், வீட்டின் சமையலறை களையிழந் துள்ளது. தொழில்துறை மேலும் நலிவடையும் ஆபத்து எரிவாயு தட்டுப்பாடு என்பது வெறும் எரிபொருள் சிக்கல் மட்டு மல்ல; அது ஒட்டுமொத்த அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்விற் கும் வித்திடும் பேராபத்து. போக்கு வரத்து மற்றும் உற்பத்திச் செலவு அதி கரிப்பதால், சாமானிய மக்க ளின் அன்றாட உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரக்கூடும் எனப் பொரு ளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். “ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை உயர்வார் நலிவடைந்துள்ள தொழில் துறையை, இந்த எரிவாயு தட்டுப்பாடு முழுமையாக அழித்துவிடும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, எரிவாயு விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும்,” என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்க ளின் தற்போதைய ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.