முந்தய பக்கம்

கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

8 Jun 2026, 9:40 pm
கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>விருதுநகர், ஜூன் 8- சமையல் எரிவாயு சிலிண் டர் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விருதுநகரில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய அரசு தொடர்ந்து சமையல் எரிவாயு விலை யை உயர்த்தி வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்க ளின் வாழ்க்கைச் சுமை அதி கரித்து வருவதாக ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர் கள் குற்றம்சாட்டினர். மேலும், கேஸ் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், அனைத்து குடும்பங்களுக் கும் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலை யில் வழங்க வேண்டும், அத் தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட் டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விருதுநகர் பழைய பேரு ந்து நிலையம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு நகரச் செயலாளர் வி. ராஜேஸ்வரி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில், மாநில பொதுச் செயலாளர் ராதிகா கண்டன உரையாற்றினார். இதில் மங்கம்மாள், ஜெயா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram