சிலிண்டர் விலை உயர்வு கண்டித்து இடதுசாரிகள் - விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்
8 May 2026, 12:40 am
<p><strong>சிலிண்டர் விலை உயர்வு கண்டித்து இடதுசாரிகள் - விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்</strong></p><p>வேலூர், மே 7- வணிகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் ரயில்வே துறையில் 29 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகளின் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது. எஸ்.பரசுராமன், ஜி.லதா, அ.இளங்கோ மற்றும் எம்.சரோஜா ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தைச் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி தொடங்கி வைத்துப் பேசினார். விசிக மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார் நிறைவுரையாற்றினார். சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் எல்.மணி மற்றும் சிபிஐ (எம்எல்) எஸ்.வாசுதேவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.</p>
