தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிவாயு விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்

9 May 2026, 2:34 am
எரிவாயு விலை உயர்வை கண்டித்து  இடதுசாரிகள் விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்

எரிவாயு விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் விசிக கூட்டு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மே 8: வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், ரயில்வே பணியிடங்களைக் குறைக்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் திருவள்ளூரில் வியாழக்கிழமை (மே 7) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.

இதற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், சிபிஐ மாவட்டப் பொரு ளாளர் எஸ். மயில்வாகணன், விசிக மாவட்ட நிர்வாகிகள் தளபதி சுந்தர், இரா.வே. யோகா, அருண் கௌதம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ. ஆறுமுகநயினார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. சம்பத், விசிக தொகுதிச் செயலாளர்கள் சி. நீலமேகம் (பொன்னேரி), ஆவடி மு. ஆதவன் (ஆவடி), இளங்கோவன் (மாதவரம்), ப. நேசக்குமார் (கும்மிடிப்பூண்டி) மற்றும் சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலாளர் எம். அன்பு ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைச் சாடிப் பேசினர்.

இந்தக் கண்டனப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

கூடுவாஞ்சேரி வணிக எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்களை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக நிர்வாகி தென்னவன் (எ) கேது தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு. பாரதி அண்ணா, வண்டலூர் வட்டச் செயலாளர் சேஷாத்திரி, சிபிஐ நிர்வாகிகள் மேக நாதன், தேவராஜ், சிபிஐ (எம்.எல்) நிர்வாகி தினேஷ் கோபால், விசிக அமைப்புச் செயலாளர் செங்கை தமிழரசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.