ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பை வாகனங்கள் பழுது!
27 Nov 2025, 3:11 pm
<p>ராணிப்பேட்டை, நவ.27- ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பை கழிவுகளை சேகரித்து அகற்றும் பணி களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழுதடைந்து, உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகள் செய்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாததால் இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. குப்பை களை ஏற்றிச் செல்லும் பெரிய லாரி மரத்தடியில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் டயர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. சிறு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளின் அடிப்பகுதி துருப்பிடித்து ஓட்டைகள் விழுந்துள்ளன. இதனால் குப்பைகளை ஏற்றிச் செல்லும் போது கழிவுகள் சாலையில் கசிந்து நகரின் சுகாதார நிலையை மேலும் மோச மாக்கக்கூடிய அபாயம் உள்ளது. தூய்மைப் பணியாளர்கள் இந்த பழுதான வாகனங்களைப் பயன்படுத்தி தினசரி குப்பை அகற்றும் பணியை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பழுதான வாகனங்கள் காரணமாக குப்பை களை உரிய நேரத்தில் அகற்ற முடியாமல் பணிச்சுமை அதிகரித்துள்ளது. சேதமடைந்த தொட்டிகளில் கழிவுகளை கையாளும் போது தொழிலாளர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் குப்பைகளைச் சரியான நேரத்தில் அகற்றாததற்கு பொதுமக்கள் மத்தியில் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ் ஆகியோர் இந்த பிரச்சினைக்கு தீர்வு கோரி வலியுறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பழுதடைந்த வாகனங்களை சரிசெய்ய வேண்டும் என்றும், பயன்பாட்டிற்கு தகுதியற்ற பழைய வாகனங்களை மாற்றி புதிய வாக னங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நட வடிக்கைகள் மூலம் மட்டுமே தூய்மைப் பணியாளர்களின் சிரமங்களை போக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
