விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு குவியும் குப்பைகளால் துர்நாற்றம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>விழுப்புரம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு குவியும் குப்பைகளால் துர்நாற்றம்</strong></p>
<p>விழுப்புரம், பிப்.20- விழுப்புரம் சிக்னல் அருகே திருச்சி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலக நுழைவாயில் முன்பு, இரவு நேரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி யில் 42 வார்டுகளில் குப்பை களை அப்புறப்படுத்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், வங்கி நுழைவாயிலில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்படு கின்றன. இதனால் வங்கிக்கு வரும் பொதுமக்களும் வியாபாரிகளும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு குப்பை கொட்ட வேண்டாம் என வங்கி சார்பில் அறிவிப்புப் பலகை வைத்தும் மர்ம நபர்கள் குப்பை கொட்டுவது தொடர்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரச் சீர்கேட்டைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
