முந்தய பக்கம்

குப்பைகள் எரிப்பு: மக்கள் அவதி

19 Jan 2026, 2:23 pm
குப்பைகள் எரிப்பு: மக்கள் அவதி
<p><strong>குப்பைகள் எரிப்பு: மக்கள் அவதி</strong></p> <p>சேலம், ஜன.19- மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி, சக்தி நகர் பகுதி யில் மருத்துவக்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் &nbsp;கொட்டி எரிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அடுத் துள்ள மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி சக்தி நகர் பகுதி யில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 3 ஆயி ரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக் குடியிருப்புகளுக்கு அருகாமையில் பல்வேறு பகுதிக ளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப் பட்டு எரியூட்டப்படுவதால், புகைகள் முழுவதும் குடியி ருப்புகளுக்குள் செல்கிறது. இதனால் பெண்கள், குழந் தைகள் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அதிகப்படியான மாங்காய் சாகுபடியும் நடந்து வருகிறது. இங்கு குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் தற்பொழுது மாங்காய் விளைச்சல் 50 சதவீதம் பாதிக்கப்பட்டு மரங்கள் அழியும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த &nbsp;பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை மாவட்ட நிர்வா கத்திற்கு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலை தான் இந்த பகுதியில் நீடித்து வருவதாகவும் உடன டியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பகுதி யில் குப்பை கொட்டுவதையும், எரியூட்டப்படுவதை யும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram