தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு: இழப்பீடு கோரி போராட்டம்

10 Apr 2026, 5:30 am
மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு: இழப்பீடு கோரி போராட்டம்

மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு: இழப்பீடு கோரி போராட்டம்

கோவை, ஏப். 9- கோவையில் மின் கம்பத்தில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கேங்மேன் பணியாளரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, சிஐடியு இயக்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அவலூர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (32). இவர் கோவை துடியலூர் மின் வாரியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கேங்மேன் பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த செவ்வாயன்று மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் வாரிய அதிகாரிகளின் தவறான அணுகுமுறையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறி, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் பதினாலு டப்பாபாத் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, தலைமை பொறியாளர் சதீஷ்குமார், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் டி.ஜெய்சங்கர், மண்டல செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.