ஜூன் 5 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்: கங்கைகொண்டான் சிப்காட்டில் பிரச்சார கூட்டம்
1 Jun 2026, 10:55 pm
<p><strong>ஜூன் 5 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்: கங்கைகொண்டான் சிப்காட்டில் பிரச்சார கூட்டம்</strong></p><p>திருநெல்வேலி, ஜுன் 1- நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஏடிசி டயர் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் 240 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்க ளை நிரந்தர படுத்தப்பட வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் போக்கை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2026 ஜூன் 5ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அடையாள வேலை நிறுத்தத்தின் பிரச்சாரக் கூட்டம் திங்கட்கிழமை மாலையில் ஏடிசி டயர் கம்பெனி முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு ஏடிசி தொழிலாளர் சங்க துணைத் தலைவர் கொம்பையா தலை மை தாங்கினார் அடுத்த கட்ட பணிகள் சம்பந்தமாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜகோபால் பேசினார் வேலை நிறுத்தம் குறித்து சங்கத்தின் துணைத் தலைவரும் ஏடிசி தொழிலாளர் சங்கத்தின் செயல் தலை வர் ஆர்.மோகன் பேசினார் கூட்டத்தில் ஜூன் 5 வேலை நிறுத்தத்தில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் முழுமையாக பங்கேற்பது என்றும் ஏடிசி நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுப்பு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது கூட்டத்தில் ஏடிசி டயர் கம்பெனி தொழி லாளர் சங்கத்தின் நிர்வாகிகள் செல்வகுமார், சின்னத்துரை, ரவி, கலைச்செல்வன், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பெருமாள் துணை தலைவர் செல்வராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
