பாஜக ஆளும் உ.பி.,யில் அதிர்ச்சி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்
7 Dec 2025, 3:52 pm
<p><strong>பாஜக ஆளும் உ.பி.,யில் அதிர்ச்சி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்</strong></p>
<p>லக்னோ பாஜக ஆளும் மாநிலங் கள் குற்றச் சம்பவங்க ளின் கூடாரங்களாக மாறிவிட்டன. இதில் கோராக்பூர் மடத்தின் சாமியாரான ஆதித்ய நாத் முதலமைச்சராக உள்ள உத்த ரப்பிரதேச மாநிலம் பாலியல் வன் கொடுமை சம்பவங்களின் கூடார மாக மாறியுள்ளது. இந்த மாநிலத் தில் பாலியல் வன்கொடுமை இல் லாத நாட்களே இல்லை. இதனால் பெண்கள், மாணவிகள், சிறுமிகள் வெளியில் நடமாடவே அஞ்சி வரு கின்றனர். இந்நிலையில், உத்தரப்பிர தேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 13 வயது சிறுமி யை, அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த சில நாட்களுக்குமுன் பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும், பாலியல் வன்கொடுமை சம்ப வத்தை வீடியோவாக எடுத்து ஆன் லைனில் விட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி பெற்றோரிடம் சொல்லாமல் இருந் துள்ளார். தொடர்ந்து வீடியோவை ஆன் லைனில் வெளியிடமல் இருக்க ரூ.5 லட்சம் தரும்படி சிறுமியின் பெற் றோரை தொடர்ச்சியாக 2 பேரும் மிரட்டியுள்ளனர். மகளை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டு மல்லாமல், பணம் பறிக்கும் முயற்சி யை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறு மியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக் குப்பதிவு செய்த காவல்துறை யினர், சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வைபவ் (வயது 19), விஷால் (வயது 21) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் கள்ளத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
