நிலைத்த கிராமப்புற வளர்ச்சிக்காக எத்தியோப்பிய அரசுடன் காந்திகிராம பல்கலை ஒப்பந்தம்
17 Jan 2026, 2:42 pm
<p><strong>நிலைத்த கிராமப்புற வளர்ச்சிக்காக எத்தியோப்பிய அரசுடன் காந்திகிராம பல்கலை ஒப்பந்தம்</strong></p>
<p>சின்னாளப்பட்டி, ஜன.17- நிலைத்த கிராமப்புற வளர்ச்சிக்கான புதுமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் காந்திகிராம பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கையெ ழுத்தானது. எத்தியோப்பிய அரசின் புதுமை மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம், புதுமை மற்றும் மரபுத் தொழில்நுட்பம் தொடர் பான அறிவுசார் செயல்பாடுகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்ட எத்தியோப்பிய மாநில அமைச்சர் டாக்டர் பாயிஸ்ஸா பி.படாசா முன்னிலையில், காந்தி கிராம பல்கலைக் கழக துணைவேந்தர் பஞ்சநதம் மற்றும் எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கிருஷ்ணராஜ் ராமசுவாமி ஆகி யோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் சுந்தர மாரி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் மீனாட்சி உள்ளிட்ட மூத்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.</p>
