தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காந்திகிராமம் பல்கலைக் கழகம் முன்பு ரூ.7 கோடியில் நடைமேம்பாலம் முதல் கோரிக்கை நிறைவேறியது: ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.

11 Oct 2026, 9:25 pm
காந்திகிராமம் பல்கலைக் கழகம் முன்பு  ரூ.7 கோடியில் நடைமேம்பாலம் முதல் கோரிக்கை நிறைவேறியது: ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.

காந்திகிராமம் பல்கலைக் கழகம் முன்பு ரூ.7 கோடியில் நடைமேம்பாலம் முதல் கோரிக்கை நிறைவேறியது: ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.

சின்னாளபட்டி, அக்.11-காந்திகிராமம் பல்கலைக் கழக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல்–மதுரை தேசிய நான்குவழிச் சாலையில் ரூ.7 கோடிமதிப் பில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அமைந்துள்ள காந்திகிராமம் பல்கலைக் கழகத்துக்கு நாள்தோறும் ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர். பல்கலைக் கழக நுழைவாயில் அருகே செல்லும் நான்கு வழிச்சாலையைக் கடக்கும்போது மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஊழியர்கள் விபத்து அபாயத்தை எதிர்கொண்டனர்.கடந்த 10 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் சுமார் 15 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2024 இல் திண்டுக்கல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்ஆர்.சச்சிதானந்தம், மாணவர்களின் நலன் கருதி நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என தனது முதல் கோரிக்கையாக ஒன்றிய அரசிடமும், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்திடமும் தொடர்ந்து வலியுறுத்தினார்.2 ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக, தற்போது பல்கலைக் கழக நுழைவாயில் முன்பு ரூ.7 கோடி மதிப்பில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் பாதுகாப்பாக சாலையைக் கடந்து பல்கலைக் கழகத் துக்குச் செல்ல வழிவகைஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கூறுகையில், “மாணவர்கள் உயிர் பயத்துடன் நான்குவழிச் சாலையைக் கடந்து செல்லும் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் கோரிக்கையாக நடைமேம்பாலம் அமைக்க வலியுறுத்தினேன். தற்போது கோரிக்கை நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் பாதுகாப்பாகப் பல்கலைக் கழகத்துக்கு வந்து கல்வி பயில்வதற்கு இது உதவும்” என்றார்.நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்த எம்.பி.க்கு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.