காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மத நல்லிணக்க உறுதி ஏற்பு
4 Oct 2026, 12:14 am
<p><strong>காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மத நல்லிணக்க உறுதி ஏற்பு</strong></p><p>மகாத்மா காந்தியின் பிறந்த தினமான வெள்ளியன்று (அக்.2) சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழியை வாசித்தார். பேரா.கருணானந்தம், முனைவர் பொன்னுராஜ், பேரா.ஹாஜாகனி, காங்கிரஸ் கட்சி தலைவர் இதயதுல்லா, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
