சாதி, மதம் கடந்து மக்களை இணைக்கும் சக்தி காந்தி என்பதால் அவரது பெயரை அழிக்கின்றனர் காந்தி நினைவு நாள் நிகழ்வில் அ.சவுந்தராசன் பேச்சு
30 Jan 2026, 5:56 pm
<p><strong>சாதி, மதம் கடந்து மக்களை இணைக்கும் சக்தி காந்தி என்பதால் அவரது பெயரை அழிக்கின்றனர் காந்தி நினைவு நாள் நிகழ்வில் அ.சவுந்தராசன் பேச்சு</strong></p>
<p>சென்னை, ஜன. 30 – சாதி, மதம், வர்ணம் கடந்து மக்களை இணைக் கும் சக்தியாக மகாத்மா காந்தி விளங்குவதால், அவரது பெயரை வரலாற்றி லிருந்து ஒழிக்கச் சிலர் நினைக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவருமான அ.சவுந்தராசன் கூறினார். மகாத்மா காந்தியின் நினைவு தினமான வெள்ளிக் கிழமை (ஜன. 30), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பாதுகாக்கவும், அத்திட்டத்தி லிருந்து காந்தியின் பெயரை நீக்கியதைக் கண்டித்தும் பிரச்சார இயக்கத்தை அ.சவுந்தராசன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அ.சவுந்தரா சன் பேசியதாவது: “இன்று மகாத்மா காந்தியின் நினைவு தினம்; இந்தியாவின் கருப்பு நாள். மனித இனத்தின் ஒற்று மைக்காகவும், மக்கள் நல்லி ணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து இயங்கிய ஒரு தலைவர் படுகொலை செய்யப்பட்ட தினம் இது. எளிய மக்களின் மேம் பாட்டிற்காகக் குரல் கொடுத்து வந்த காந்தியின் மறைவு, சாதாரண மக்களின் வாழ்வாதாரப் போராட்டங் களுக்குப் பேரிழப்பாக அமைந்தது. மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை ஏமாற்றும் சக்தி களே காந்தியடிகளுக்கு எதி ரான செயலில் ஈடுபட்ட னர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களைப் பெரு மளவில் அணிதிரட்டிய காந்தி, விடுதலைக்குப் பின்னரும் மக்களுக்காகவே பணியாற்றினார். ஆனால், சாதாரண மக்களின் அடிப் படைப் பிரச்சனைகளுக் காகவோ அல்லது வாழ் வாதாரத் தேவைகளுக் காகவோ ஒருபோதும் போராட்டங்களை முன்னெ டுக்காத அமைப்புதான் ஆர்எஸ்எஸ்.100 நாள் வேலைத்திட்டம் காந்தியின் பெயரால் கொண்டு வரப்பட்ட ‘நூறு நாள் வேலை உறுதித் திட்டம்’ கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றி வரு கிறது. கம்யூனிஸ்டுகள் மற்றும் இடதுசாரிகளின் தொடர் வலியுறுத்தலால் கொண்டு வரப்பட்ட இத்திட் டம் இல்லையென்றால், நாட்டின் பல கிராமங்களில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தி ருக்கும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 30 கோடி மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தைப் பாதுகாத்துக் கொண்டனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்கள் பெரும் அழிவிலி ருந்து காக்கப்பட்டனர். வறுமையால் நலத்திட்டங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலை யில்லா அரிசி மற்றும் அரசுப் பள்ளிகளில் செயல் படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் போன்றவை நாட்டில் இன்றும் நிலவும் வறுமை யைச் சுட்டிக்காட்டுகின்றன. வறுமையில் உள்ள மக்க ளுக்கு அரசு தன் நிதியிலி ருந்து உதவி செய்ய வேண்டியது கட்டாயமான கடமையாகும். ஆனால், ஒன்றிய அரசு இத்திட்டத் தைப் படிப்படியாகச் சிதைத்து வருகிறது. அன்று காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர்கள், இன்று அவர் பெயரால் இயங்கும் திட்டத்தை முடக்குவதன் மூலம் அவரை இரண்டாவது முறையாகக் கொலை செய்கிறார்கள். சாதி, மதம், வர்ணம் கடந்து மக்களை இணைக்கும் சக்தியாக காந்தி விளங்குவதால், அவர் பெயரை ஒழிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது. பிரச்சார இயக்கம் மேலும், இத்திட்டத்திற் கான முழுச் செலவையும் ஒன்றிய அரசே ஏற்க வேண்டும் என்ற விதியை மாற்றி, தற்போது 40 சதவீதச் செலவை மாநில அரசு ஏற்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது. இது மாநில அரசுகளின் நிதித் தன்னாட்சி யைப் பறிப்பதோடு, திட்டத் தையே முடக்கும் முயற்சி யாகும். எனவே, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழைய முறைப்படி முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வி.செந்தில் குமார் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா உரை யாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வே. ஆறுமுகம், வி.தனலட்சுமி, எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br />
</p>
