தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

3 Oct 2026, 12:05 am
மகாத்மா காந்தி சிலைக்கு  மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், அக் 2- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பேராவூரணி உள்ளிட்ட இடங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தஞ்சாவூர்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து நடத்திய விழாவில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் தலைமை வகித்தார். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்டச் செயலாளர் ஆர்.புண்ணியமூர்த்தி உறுதிமொழியை வாசித்தார்.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என். குருசாமி, மாநகரத் தலைவர் அப்பாஸ் மந்திரி, துணைத் தலைவர் சபிக் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பேராவூரணி

பேராவூரணியில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். ஜகுபர் அலி தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மூர்த்தி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலச் செயலாளர் அப்துல் சலாம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருவையாறு

திருவையாறில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொருளாளர் எம். ராம் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம். கதிரவன், ஓய்வூதியர் சங்கத்தைச்சேர்ந்த எல். சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.