கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
9 Dec 2025, 4:25 pm

காந்தி, நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டி

திருப்பூர், டிச. 9 - மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 6, 7 ஆகிய நாட்களில் பேச் சுப்போட்டிகள் நடத்தப்படுகின்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட ரங்கில். மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவர்களுக்கு, தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி, காந்தியச் சிந் தனைகள் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணாக்கர்க ளுக்கு, மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு, காந் தியடிகளின் சத்தியாகிரகம் காந்தியடிகளும் வட்டமேசை மாநாடும், காந்தியின் மத நல்லிணக்கம் என்ற தலைப்புகளி லும், ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி பள்ளி மாணவர்களுக்கு, இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங் களிப்பு, நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு என்ற தலைப்புகளிலும் நடைபெறவுள் ளது. தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், அறை எண்.608, மாவட்ட ஆட்சியரகம், திருப்பூர் என்ற முகவரியில் நேரில் / அஞ்சலில் அல்லது ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜனவரி 5 ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவ ருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000/-வீதம் வழங்கப்ப டும்.

மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டு சிறை

திருப்பூர், டிச.9- கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்ரகு மான்(30), ஜாபர் அலி(30), பைசல் ரகுமான்(29), அஜ்மல்(28). இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு குன்னத் தூரில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருந்து குடோன் அறையை உடைத்து உள்ளே இருந்த 2 மடிக் கணினிகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட னர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஊத்துக்குளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், 4 பேருக் கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபரா தம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் திருப்பூர் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி யினர் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வ ழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.