புதுக்கோட்டையில் கந்தர்வன் நினைவு கலை இரவு
8 Feb 2026, 3:55 pm

புதுக்கோட்டையில் கந்தர்வன் நினைவு கலை இரவு

புதுக்கோட்டை, பிப்.8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், எழுத்தாளர் கந்தர்வன் நினைவு கலை இரவு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் கவி ஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். கந்தர்வன் படைப்புகளை நாட்டுடமை யாக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரையை பாராட்டியும், கந்தர்வன் கதை யாடல் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளித்தும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உரையாற்றினார். கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் உரையாற்றி னார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம், பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோரின் உரை வீச்சுடன் பறை யாட்டம், சிலம்பாட்டம், பம்பையாட்டம், கட்டைக்காலாட்டம், மாடாட்டம், காவடி யாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு பாடல்க ளும் நடைபெற்றன. புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார், நவீன நாரதர் நாடகம், கவிச்சரம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. கலை இரவில் சட்டமன்ற உறுப்பி னர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவி தைப்பித்தன், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் நா.முத்து நிலவன், ஆர்.நீலா, செயற்குழு உறுப்பி னர்கள் ஜீவி, வி.ரெங்கராஜன், சிடிஎன் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் சத்யா கரிகாலன், பழனியாண்டவர் கல்லூரி முதல்வர் தங்க.ரவிசங்கர், கலைஞர் தமிழ்ச் சங்கத் தலைவர் த. சந்திரசேகரன், துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலை இரவையொட்டி, புதுக் கோட்டை அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கிய கலைப் பேரணியை பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா பறையடித்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்டத் தலை வர் ராசி.பன்னீர்செல்வன் வரவேற்க, மாவட்டச் செயலர் ரெ.வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.