ஒரு வழியாக சஞ்சு சாம்சனை பாராட்டிய கம்பீர்
15 Mar 2026, 4:11 pm
<p><strong>ஒரு வழியாக சஞ்சு சாம்சனை பாராட்டிய கம்பீர்</strong></p>
<p>சமீபத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அதிரடி தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டாமல் புறக்கணித்து வந்தார். நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், கடும் எதிர்ப்பால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை பாராட்டியுளார். தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,”சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினால் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுத்து விடுவார் என்று காம்பீர் கூறினார்.</p>
