காலி மதுப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஈரோட்டில் ஒத்திவைப்பு
28 Nov 2025, 2:28 pm
<p><strong>காலி மதுப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் ஈரோட்டில் ஒத்திவைப்பு</strong></p>
<p>ஈரோடு, நவ.28- தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பால், ஈரோடு மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் 28.11.2025 முதல் காலி மதுப்பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அறிவித்தது. இவ்வாறு காலி பாட்டிலை திருப்பித் தரும்போது அதற்கு ரூ.10 வழங்குவது என கூறியிருந்தது. நெகிழி பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில் டாஸ்மாக் நிர்வாகம் சோதனை அடிப் படையில் சில மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி, ஈரோடு மாவட் டத்திலும் நடைமுறைக்கு கொண்டு வரப்ப டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கத்தினர், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதற் கிடையில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங் கம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) ஆகியோருக்கு மனு அனுப்பியது. அத்துடன் பணி புறக்கணிப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஐடியு சார் பில் டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் என். முருகையா, பொதுச்செயலாளர் கே.ரவிச் சந்திரன், நிர்வாகிகள் வி.பாண்டியன், பொன். பாரதி மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில், மீண்டும் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசி இத்திட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்தது. இதனையடுத்து போராட்டத்தை ஒத்திவைத்து அனைவரும் பணிக்கு திரும்பினர்.</p>
<p> </p>
