தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேலில் ஆட்சியமைக்க காடி ஐசென்காட் தீவிரம்: முதல் கூட்டணிக் கட்சியாக அவிக்டோர் லீபர்மேனின் கட்சியுடன் ஒப்பந்தம்

34 minutes before
இஸ்ரேலில் ஆட்சியமைக்க காடி ஐசென்காட் தீவிரம்: முதல் கூட்டணிக் கட்சியாக அவிக்டோர் லீபர்மேனின் கட்சியுடன் ஒப்பந்தம்

அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு புதிய அரசை அமைக்கும் முயற்சியில், இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டின் யஷார் கட்சி, வலதுசாரிக் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மையவாதக் கட்சியான யஷார், அவிக்டோர் லீபர்மேன் தலைமையிலான ‘இஸ்ரேல் எவர் ஹோம்’ (Israel Our Home) கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முதல் கூட்டணி ஒப்பந்தம் இதுவாகும்.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் உள்ள 120 இடங்களில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களை எந்தக் கட்சிக் கூட்டணியும் பெறவில்லை. இதனால், நவம்பர் 10ஆம் தேதி புதிய அரசு அமையாத நிலையிலேயே நாடாளுமன்றம் கூடியது.

இதையடுத்து, புதிய அரசை அமைக்கும் பொறுப்பை காடி ஐசென்காட்டிடம் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஒப்படைத்துள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தபோதிலும், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் அரசு காபந்து அரசாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஐசென்காட்டுக்கு அரசு அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 6ஆம் தேதிக்குள் அவர் ஆட்சியமைக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் அவகாசம் கோரலாம். அவரால் ஆட்சியமைக்க முடியாவிட்டால், நெதன்யாகுவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். அவராலும் முடியாத பட்சத்தில் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறும்.

அரபுக் கட்சிகளின் ஆதரவு முக்கியம்

வலதுசாரி லிகுட் கட்சி, தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மதவாதக் கட்சிகளுடன் இணைந்து 53 இடங்களைக் கொண்டுள்ளது.

ஐசென்காட்டின் மைய-வலதுசாரி யஷார் கட்சியும், அவிக்டோர் லீபர்மேன் உள்ளிட்ட அதன் கூட்டணி ஆதரவுக் கட்சிகளும் 48 இடங்களைக் கொண்டுள்ளன. அதேவேளையில், இஸ்ரேலின் பாலஸ்தீனிய சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் 19 இடங்களும் ஐசென்காட்டுக்கு ஆதரவாக அமைய வாய்ப்புள்ளது. இந்தக் கட்சிகள் அனைத்தும் நெதன்யாகுவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

முன்னதாக நெதன்யாகு தலைமையிலான அரசில் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த அவிக்டோர் லீபர்மேன், தற்போது அவரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது தொடர்பாகவும் ஐசென்காட் மற்றும் அவரது ‘மாற்றத்திற்கான கூட்டணி’ கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

எட்டு நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றிய இடதுசாரி ஜனநாயகக் கட்சி (Democrats), ஐசென்காட் நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் ஒற்றுமை அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவருடனான பேச்சுவார்த்தையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயிர் கோலன், நெதன்யாகு இல்லாத அரசே தமது விருப்பம் என்றும், அந்த அரசில் அரபுக் கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.