தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

18 Jun 2026, 11:09 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஜி 7 உச்சிமாநாடு அறிக்கை இன்றி நிறைவடைந்தது

பிரான்ஸ் தலைமையில் நடைபெற்ற ஜி 7 உச்சிமாநாடு இரண்டாவது ஆண்டாக கூட்டு அறிக்கை வெளியிடப்படாமல் நிறைவடைந்துள்ளது. அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் வெளியாவதை தவிர்ப்பதற்காக கூட்டு அறிக்கையை கைவிட்டதாகவும், அதற்குப் பதிலாக தலைப்பு வாரியான ஆவணங்களை வெளியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் போர், மேற்கு ஆசிய நிலவரம், அரிய கனிமங்கள், மேக்ரோ-பொருளாதார மறுசமநிலை உள்ளிட்ட விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்பு : உக்ரைன்-ஜெர்மனி ஒப்பந்தம்

உக்ரைன் மற்றும் ஜெர்மனி ஒன்றிணைந்து வான்பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ளது. பிரான்சில் பாதுகாப்பு கண்காட்சி நடைபெறுகிறது. அதில் உக்ரைன் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ரெய்ஜா’ (Freyja) என்ற இந்த வான் பாதுகாப்பு மற்றும் பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) மற்றும் ஜெர்மனியின் ‘ஹென்சோல்ட்’ (Hensoldt) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த தயாரிப்பு நடைபெற உள்ளது.

டிரம்ப்பின் மிரட்டல்: பொறுப்பற்ற செயல் -லூலா

பிரேசில் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளார். இது ஒரு அச்சுறுத்தல் நடவடிக்கை. பிரேசிலுக்கு இழைக்கப்பட்ட ஒரு பொறுப்பற்ற செயல். அது அவருக்கும் தெரியும். அதனால்தான் அவர் தொடர்ந்து ஒரு பேரரசரைப் போல நடந்துகொள்கிறார் என பிரேசில் ஜனாதிபதி லூலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அமைந்துள்ளது. இது ஒரு முரணான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகள் மீதான வன்முறைகள் தீவிரமாக அதிகரிக்கிறது

உலகம் முழுவதும் மோதல்களில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழுக்களால் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது. ‘குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்’ குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி இது தெரிய வந்துள்ளது. 2025 இல் ஆயுதக்குழுக்களால் குழந்தைகளுக்கு எதிராக 38,558 வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் 24,174 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலமுறை இத்தகைய வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ஆயுதங்களை பெற துடிக்கும் தைவான் ஜனாதிபதி

சீனாவுடன் இணைவதை தைவான் நிராகரிக்கிறது என தைவான் ஜனாதிபதி லாய் சிங்-தே பேசியுள்ளார். மேலும் 14 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்வதற்காக அமெரிக்கா “முடிந்த வரை விரைவாக” ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார். தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி தான் என சீனா அறிவித்துள்ளது. ஆனால் அந்த பகுதியை சீனாவிற்கு எதிரான அரசியலுக்காக பல ஆண்டுகளாக அமெரிக்கா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பதவிக்காலத்தை மாற்றியமைக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா

காங்கோ மக்கள் போராட்டம்

கின்ஷாசா,ஜூன் 18- காங்கோவில் ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கோ அரசியலமைப்பின்படி ஒருவர் இருமுறை மட்டுமே தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க முடியும். தற்போதைய ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி (Félix Tshisekedi) தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார்.

பதவி விதிமுறையை மற்றம் செய்ய வேண்டும் என்றால் அரசியலமைப்பை திருத்தம் செய்ய வேண்டும். எனவே திருத்தம் தொடர்பாக மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை ஆகிய இரண்டினாலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதைய அரசியலமைப்பின் கீழ், முதன்முறையாக 2018 ஆண்டும், 2023 இல் இரண்டாவது முறையாகவும் ஜனாதி பதி ஷிசெகெடி தேர்வாகியுள்ளார்.

இவரது பதவிக்காலம் 2028 இல் முடிவடைகிறது. நானே மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் விரும்பினால், மூன்றாவது முறையாகப் போட்டி யிடத் தயாராக இருக்கிறேன் என மே மாதம் அவர் பகிரங்க மாகவே கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து தான் இந்த அரசமைப்பு திருத்த முடிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்காக முன்மொழி யப்பட்டுள்ள திட்டத்தை நிராகரிக்கும் வகையில், ஜூன் 13 அன்று எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தலை நகர் கின்ஷாசாவில் போராட்டம் நடத்தின.

காங்கோவின் முக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘கூட்டணி பிரிவு 64’ (C64) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அரசியலமைப்புக் கோட்பாடுகளுக்கு மாறாக அதிகா ரத்தைக் கைப்பற்றும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக குடிமக்கள் போராட வேண்டும் என்று காங்கோ அரசிய லமைப்பின் 64-ஆவது பிரிவு வலியுறுத்துகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக அந்த எண் இக்கூட்டணிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவானது நாட்டில் உள்ள குறைந்தபட்ச ஜனநாயகத்தையும் அழிக்கும் வகையில் உள்ளது. ஒட்டு மொத்த அரசியலமைப்பையே மாற்றும் வகையில் இந்த முன்மொழிவு உள்ளது.

ஷிசெகெடி மீண்டும் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. தற்போதைய அரசியலமைப்பு ஏற்கெனவே அவருக்கு வரம்புகளை விதித்துள்ளது, அது திக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள் ளனர்.

ருவாண்டா ராணுவமும் அதன் ஆதரவு பெற்ற எம்23 ஆயுதக்குழுவும் கிழக்கு காங்கோவில் பல பகுதிகளை ஆக்கிர மித்துள்ளது. இனப்படுகொலை தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஆட்சியாளர்களும் மக்கள் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு துணை போகிறார்கள். நாட்டின் பல பகுதிகள் இன்னும் அந்த ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

அந்தப் பகுதிகளில் வாழும் காங்கோ குடிமக்களுக்கு அரசிய லமைப்புச் செயல்பாடுகளில் குரல் கொடுக்க உரிமை இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ஒரு நாட்டுக்கு அவசியமானதுதான் ஆனால் அவை காங்கோ பாதுகாப்பான நாடாக மாறிய பின்னரே வர வேண்டும். அதை விட்டு விட்டு தனது ஆட்சிக்காலத்தை நீட்டிப்பதற்கான ஒரு தந்திரமாகப் பயன்படுத்தக் கூடாது என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஆயுதக் குழுக்களின் தாக்குதலால் லட்சக்க ணக்ககான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயுதக்குழுக்கள் அரசின் அதிகாரத்திற்கு சவால் விடுத்து வரும் நிலையில் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கும் மனிதா பிமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.