ஜி20 வர்த்தக மாநாடு: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!
5 Oct 2026, 8:46 pm

ஜி20 வர்த்தக மாநாடு: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!

நியூயார்க்,அக்.5-அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில், தொழில்துறை அதிக உற்பத்தி மற்றும் சந்தை சாராத பொருளாதாரக் கொள்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா கொண்டு வந்த கோரிக்கைகளை பெரும்பாலான உறுப்புநாடுகள் நிராகரித்துள்ளன. இதனால் முக்கிய பொருளாதார நாடுகளுக்கு இடையே நிலவும் தீவிர கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.ஜி20 அமைப்பின் இந்த ஆண்டிற்கான தலைமையை அமெரிக்கா ஏற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில்வர்த்தக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வரையிலானவிநியோக சங்கிலியில் கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை முழுமையாக நிராகரிப்போம் என்றும், தொழில்துறை உற்பத்தியைக்கட்டுப்படுத்துவதற்கும் அமெரிக்கா சார்பில் அறிக்கை முன்வைக்கப்பட்டது.இக்கோரிக்கைக்கு மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துக்கையெழுத்திட்டன. ஜி20 அமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்துவிட்டன.

கட்டாய உழைப்புத் தடைகளைச் சரியாகச் செயல்படுத்தவில்லை எனக் கூறி,ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 59 நாடுகளின் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் ஒருதலை பட்சமாக 10 முதல் 12.5 சதவிகிதம் வரை வரிகளை விதித்துள்ள பின்னணியில் பெரும்பாலான நாடுகள்இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தொழிற்துறையில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட 16 நாடுகள் மீது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. இது வரும் மாதங்களில் மேலும் புதிய வரிகள் விதிக்க வழிவகுக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

சீனாவை குறிவைக்கும் அமெரிக்காஅமெரிக்காவின் கோரிக்கைகளை எதிர்த்த நாடுகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சீன அரசு தொழில் துறைக்கு வழங்கும் மானியங்கள் மூலம் உருவாகும் அதிகப்படியான உற்பத்தியே உலக வர்த்தகச் சமநிலையைச் சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீனா மேற்குலக நாடுகள் தங்கள் தற்காப்பு வர்த்தகக் கொள்கைகளை (பிற நாடுகளின் மீதான வரிவிதிப்பு தடை நடவடிக்கைகளை) நியாயப்படுத்துவதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் “அதிக உற்பத்தித் திறன்”அல்லது “கட்டாய உழைப்பு” ஆகியவற்றை ஒழிப்பது என்ற பெயரில் பின்பற்றப்படும் ஒருதலைப்பட்சமான போக்கிற்கும் தற்காப்பு வர்த்தகக் கொள்கைக்கும் தனது கடுமையானஎதிர்ப்பையும் சீனா பதிவு செய்துள்ளது.