பல்வேறு உலகப் பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு கூட்டறிக்கை வெளியிடாமலேயே முடிவடைந்த‘ஜி-20’ வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு!
31 Oct 2026, 11:43 pm

பல்வேறு உலகப் பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு கூட்டறிக்கை வெளியிடாமலேயே முடிவடைந்த‘ஜி-20’ வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு!

அட்லாண், அக்.31-‘ஜி-20’ வெளியுறவுத்துறை அமைச் சர்கள் மாநாடு, நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான கருத்துவேறுபாடுகள் காரணமாக எந்தவிதக் கூட்டறிக்கையும் வெளியிடப்படாமலேயே நிறைவடைந்துள ளது.

உலகப் பொருளாதாரத்தில் முன் னணி வகிக்கும் ‘ஜி-20’ (G20) நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் மற்றும் உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகப் பிரச்சனைகள் குறித்து நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சர்வதேச மாநாடுகளில் பாரம்பரியமாக நடைபெறும் குழுப் புகைப்பட எடுக்கும் நிகழ்வும் இந்த மாநாட்டில் ரத்துசெய்யப்பட்டது.

நாடுகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் காரணமாக வழக்கமான கூட்டறிக்கை வெளி

யிடப்படாது என்றும், அதற்குப் பதிலாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) மாநாட்டின் முடிவில் அறிக்கை (Chairman’s Statement) வெளியிடுவார் என்றும் மாநாட்டில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் போர், ரஷ்யா - உக்ரைன் போர், ஆதிக்க மனப்பான்மையுடன் ஒருதலைப்பட்சமாக, உலக நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகள் (Tariffs), மற்றும் தென் சீனக் கடலில் நிலவும் மோதல்கள் போன்றவை தொடர்பான முரண்பாடுகள் கூட் டத்தில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது. மேலும், போலந்து ஜி20 அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவிப்பதும், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தென்னாப்பிரிக்காவிற்கு அழைப்பு விடுக்காததும் பிற நாடுகளின் எதிர்ப்புக்கு உள்ளாகின.நவம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தலைமையில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு ஒருமித்த கருத்துகள் எவுமின்றி நிறைவடைந்துள்ளது.