ஜி.ஆர்.வசந்தவேலு உளுந்தூர்பேட்டையில் பிரச்சாரம்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>ஜி.ஆர்.வசந்தவேலு உளுந்தூர்பேட்டையில் பிரச்சாரம்</strong></p>
<p>உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயில் தெருவில் தொடங்கி, சின்னையா தெரு, திருவெண்ணெய்நல்லூர் சாலை, சந்தை மேட்டுத் தெரு, கார்னேசன் தெரு வழியாகச் சென்று காயிதே மில்லத் தெரு மற்றும் ஈஸ்வரன் கோயில் வழியாகச் சென்னை மெயின் ரோட்டில் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், பி.சேகர், நகரச் செயலாளர் பி.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
