ஜி.சுகுமாரனின் துணைவியார் கே.வசந்தகுமாரி படத்திறப்பு நிகழ்ச்சி: தலைவர்கள் பங்கேற்பு
11 Jan 2026, 7:00 am
<p>கடலூர், ஜன.11- சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாநில தலைவருமான ஜி.சுகுமாரன் துணைவியார் கே.வசந்தகுமாரி (ஓய்வு பெற்ற என்எல்சி நிறுவனத்தில் மனிதவளத் துறை அதிகாரி) அண்மையில் காலமானார். அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சி நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். நெய்வேலி சங்க தலைவர் எஸ்.திரு அரசு, நெய்வேலி சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், குடியிருப்போர் சங்க மாவட்ட தலைவர் வி.முத்துவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். மாநில செயலா ளர் பி.சண்முகம், மத்திய கண்ட்ரோல் கமிஷன் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், தொழிற்சங்க மூத்த தலைவரும் நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், ஏ. சௌந்தர ராஜன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், அகில இந்திய துணைச் செயலாளர் மாலதி சிட்டிபாபு, மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, முன்னாள் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார்கள்.</p>
