தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளை மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும் அலுவலக திறப்பு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

23 Feb 2026, 5:35 pm
சாலையோர வியாபாரிகளை மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும்  அலுவலக திறப்பு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
<p><strong>சாலையோர வியாபாரிகளை மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும் &nbsp;அலுவலக திறப்பு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு</strong></p> <p>சென்னை, பிப். 23- சாலையோர வியா பாரிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாது காக்கும் என்று கட்சியின் &nbsp;அகில இந்திய கட்டுப்பாட் டுக்குழுத் தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புற நகர் அமைப்புசாரா சிறு குறு சாலையோர வியாபாரி கள் சங்கத்தின் அலுவலகம், 1பி, தரமணி 100அடி சாலை, &nbsp;சென்னை-41 என்ற &nbsp;முகவரியில் அமைக்கப்பட் டுள்ளது. இந்த அலுவலக திறப்பு விழா திங்களன்று (பிப். 23) நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்த ஜி.ராமகிருஷ்ண னிடம் சங்கத்தின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட் டது. அதனைப் பெற்றுக் கொண்டு பேசிய அவர், சாலையோர வியாபாரி களை பாதுகாக்க மார்க் சிஸ்ட் கட்சியும், வர்க்க அமைப்புகளும் நடத்திய நெடும் போராட்டத்தை நினைவு கூர்ந்தார். சாலையோர வியா பாரிகளை பாதுகாக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, நகர விற்பனை க்குழு அமைத்து தேர்தல் நடத்தியதையும், அதனை ஜனநாயகப் பூர்வமாக செயல்பட வைக்க மேற் கொள்ளப்படும் முயற்சி களையும் அவர விவரித் தார். மேலும், &ldquo;சாலையோரா வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க மார்க் சிஸ்ட் கட்சி உறுதியோடு செயல்படும். வியாபாரிகள் சங்கத்தோடு நின்றுவிடா மல், மார்க்சிஸ்ட் கட்சியிலும் இணைய வேண்டும்&rdquo; என்று வலியுறுத்தினார். இந்நிகழ்விற்கு சங்கத் தின் தலைவர் கு.ராஜன்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.வனஜ குமாரி வரவேற்றார். சிபிஎம் தென்சென்னை சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஒய்.இஸ்மாயில் உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.