தேசத்தைப் பாதுகாக்கும் இயக்கத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் கல்லூரி பொன்விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
20 Dec 2025, 3:38 pm
<p>சென்னை, டிச. 20- தேசத்தைப் பாதுகாக்கும் இயக்கத்தில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் சனிக்கிழமையன்று (டிச. 20) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: விமர்சனப் பார்வை அவசியம் மக்களுக்கு வழிகாட்டியாகவும், சிறந்த சமூகத் தலைவராகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்களின் உயரத்திற்கு மாணவர்கள் வர வேண்டும். இன்றைய மாணவர்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கை. பாடத்திட்டம், அரசியல் அல்லது தத்துவம் என எதுவாக இருந்தா லும், மாணவர்களிடம் ஒரு விமர்சனப் பார்வை இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் அந்தச் சிந்தனையை உருவாக்க வேண்டும். கணிதமேதை ராமானுஜம், உலகப் புகழ்பெற்ற பேராசிரி யர் ஹாடியின் கணிதத்தையே தவறு என்று சுட்டிக்காட்டும் அளவுக்குத் தெளிவு பெற்றிருந்தார். அவரைப் போல எத்தகைய படிப்பாக இருந்தாலும் மாணவர்கள் கவனத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும். ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை யுஜிசி ஏஐசிடிஇ போன்ற உயர்கல்வி நிறுவனங்களை ரத்து செய்துவிட்டு, ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷக்’ என்ற அமைப்பை உருவாக்கும் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் தொடங்கிய அழிவு வேலை கள் இன்றும் தொடர்கின்றன. ஏழை மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துவிட்டார்கள். தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்கும் நுழைவுத் தேர்வை ஒன்றிய பாஜக அரசு திணித்துள்ளது. ஆனால், அதே சமயம் குருகுலக் கல்வி யில் 5 ஆண்டுகள் சமஸ்கிருதம், வேதம், மனுதர்மம் படித்தவர்கள் ஐஐடியில் நேரடி யாக முனைவர் பட்டம் பெற ‘சேதுபந்த வித்வான் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயலாகும். அரசியலமைப்பைப் பாதுகாக்க அழைப்பு டாக்டர் அம்பேத்கர் வரையறுத்து, காயிதே மில்லத் கையெழுத்திட்டு, நேரு நிறைவேற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்த்தெறியும் வேலைகள் நடக்கின்றன. தேசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது. எனவே, படிப்பில் கவனம் செலுத்துவதோடு, தேசத்தைப் பாது காக்கும் மகத்தான இயக்கத்திலும் மாண வர்கள் பங்கெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் காணொளி வாயிலாகவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கல்லூரித் தாளாளர் ஜனாப் எம்.ஜி.தாவூத் மியாகான் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் நேரடியாகவும் பங்கேற்று உரையாற்றினர்.</p>
