தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக சிபிஎம் குரல் கொடுக்கும் மதுராந்தகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் தீவிர பிரச்சாரம்

1 hour before
மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக சிபிஎம் குரல் கொடுக்கும் மதுராந்தகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் தீவிர பிரச்சாரம்

மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக சிபிஎம் குரல் கொடுக்கும் மதுராந்தகத்தில் ஜி.ராமகிருஷ்ணன் தீவிர பிரச்சாரம்

மதுராந்தகம், செப். 24-மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டயிடும் பா.சுகந்தியை ஆதரித்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்்கிழமை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:தவெக அரசின் பட்ஜெட்டில் பொதுப்பணித்துறை, மருத்துவம், கல்வி உள்ளிட்டதுறைகளில் படித்த இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதற்குப் பதிலாக ஒப்பந்த முறையை அமல்படுத்தும் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி எதிர்க்கிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மட்டுமல்லாமல், தவெகவின் மக்கள் விரோதக்கொள்கைகளுக்கு எதிராகவும் மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் போட்டியிடுகிறது.

மூன்று பேர் கொண்ட மத்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, இரண்டு தேர்தல் ஆணையர்கள் 10மாதங்களில் 14 முறை ஆட்சேபனைக் கடிதங்களை அளித்துள்ளனர். அவற்றையெல்லாம் மீறி, கிட்டத்தட்ட 30 மாநிலங்களில் 11 கோடிவாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். வாக்காளர்களை பாஜகவே தேர்வு செய்யும் இந்த ஜனநாயக விரோதப் போக்கை சிபிஎம் உறுதியாக எதிர்க்கிறது என்றார்.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப்பாதுகாப்புச் சட்டம்ஆகியவற்றை அரசுக்கு வெளியிலிருந்து போராடிப் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் பெரும் தொழிலதிபர் வீரமணி கடந்த6 ஆண்டுகளாகக் குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், 2025ஆம் ஆண்டிலேயே ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். போக்சோ நீதிமன்ற நீதிபதிமீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட பின்னரே வீரமணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கை முறையாக விசாரிக்காத காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் வாச்சாத்தி வழக்கு வரை காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் கூறிய அவர், மதுராந்தகம்சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்திக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், சாமுவேல் ராஜ், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் செல்வம்,விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளர் கே.நேரு, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா, மாநிலக் குழு உறுப்பினர்ஐ.வி.நாகராஜன், சிவகுமார், சிபிஐ காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சிபிஎம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன்குமார்,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஜெயந்தி, பி.சண்முகம், வி.திருமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.