களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் காப்பீட்டு ஊழியராகத் தொடங்கி கம்யூனிஸ்ட் தோழராகத் தொடரும் பங்களிப்பு - ஜி.ராமகிருஷ்ணன்
yesterday

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் காப்பீட்டு ஊழியராகத் தொடங்கி கம்யூனிஸ்ட் தோழராகத் தொடரும் பங்களிப்பு - ஜி.ராமகிருஷ்ணன்

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் காப்பீட்டு ஊழியராகத் தொடங்கி கம்யூனிஸ்ட் தோழராகத் தொடரும் பங்களிப்பு - ஜி.ராமகிருஷ்ணன் துள்ளோம். அவ்வரி சையில் இப்போது தோழர் டி.தேவப்பிரகாஷ். 1951-இல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சிப்பிப்பாறை கிராமத்தில் ஆசிரியத் தம்பதிக்குப் பிறந்தவர். இவருடைய தந்தையும் தாயும் ஆசிரியர்கள். இவர் பிறந்த ஆண்டி லேயே தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப் பில் வளர்ந்தார்.

கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்து தூத்துக்குடியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கல்லூரியில் பயிலும்போது (1968-1971) இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தார். அப் போது மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாள ராக இருந்தவர் இரா.நாராயணன் – பிற்காலத்தில் ‘தீக்கதிர் நாராயணன்’ என்று அழைக்கப்பட்டவர். “கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியே யும் பல்வேறு எஸ்.எப்.ஐ செயல்பாடுகளில் பங்கேற்றதால் அப்போதே ஓரளவுக்கு அரசியல் புரிதல் ஏற்பட்டிருந்தது” என்கிறார்தேவப்பிரகாஷ்.

வேலையோடு சங்கப் பணி

கல்லூரிக் காலத்திலேயே காப்பீட்டுத்துறை நுழைவுத் தேர்வு எழுதி, தேர்வாகி படிப்பை முடித்த உடனேயே எல்.ஐ.சி நிறுவனத்தில் 1972-இல் சேர்ந்தார். எல்.ஐ.சி நெல்லை அலுவலகத்தில் சேர்ந்தவர், பின்னர் கோவில்பட்டி கிளைக்கு மாற்றலானார். ஊழியர் சங்கத்தில் உறுப்பின ரானார். பணிப் பயிற்சி்க் காலத்திலேயே சங்க த்தின் பல நடவடிக்கைகளில் கலந்துகொண்ட தைத் தெரிவிக்கிறார். 1972-இல் போனஸ் கோரி க்கைக்காக நாடு தழுவியதாக அறைகூவல் விடுக்கப்பட்ட இயக்கங்களில் கலந்துகொண்டார்.

கோரிக்கைகளுக்காக ஊழியர்கள் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றபோது, ‘தொழிற் சங்கம் ஏன்?’, ‘தொழிலாளர் போராட்டம் எதற் காக?’, ‘வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?’ என்பன உள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கான விடைகளை நடைமுறையில் புரிந்துகொண்ட தாகக் கூறுகிறார். குறிப்பாக, எல்.ஐ.சி ஊழி யர்கள் நடத்திய போராட்டங்கள் தனக்கு வர்க்க அர சியலுக்கான பாலபாடமாக அமைந்தன என்கிறார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆர்வ மாகக் கலந்துகொண்ட இவரது பணியை அங்கீ கரிக்கும் வகையில் சங்கத்தின் கோவில்பட்டி கிளைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1979-இல் மதுரை கோட்ட துணைத் தலைவ ராகத் தேர்வானார்.

1997-ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் திருநெல்வேலி கோட்டப் பேரவையில், அது வரையில் பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வந்த சிவசங்கரன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தேவப்பிரகாஷ் பொதுச்செய லாளராகத் தேர்வானார். அடுத்த நான்கு ஆண்டு களுக்குப் பிறகு கோட்டத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர், 2007 வரையில் அப்பொறுப் பில் இருந்தார். உடல்நிலை காரணமாக, பணி ஓய்வுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு முன்ன தாகவே 2007-இல் தன்விருப்ப ஓய்வு பெற்றார்.

ஒன்றுபட்டிருந்த நெல்லை மாவட்டத்திலும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட சாதி மோதல்களின் தாக்கம் எல்.ஐ.சி ஊழியர் களிடையேயும் இருந்தது. நிறுவனத்தின் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டது. பல வடிவங்களில் அது வெளிப்பட்டது. நிர்வாகம் இந்தச் சூழலைப் பயன் படுத்திக்கொண்டு ஊழியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயன்றது. சங்கத்தின் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஊழியர்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகளைத் தான் மேற்கொண்டதையும், பெருமளவுக்கு அது வெற்றியளித்ததையும் தேவப் பிரகாஷ் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்.

கட்சிப் பணி

சங்கப் பணிகளைத் தொடர்ந்து இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ராவதற்கு, சங்கத்தின் மதுரைக் கிளை நிர்வாகி யாக இருந்த இ.எம். ஜோசப் தூண்டுகோலாக இருந்தார். தன்னுடன் தோழர் இசக்கிமுத்துவும் கட்சி உறுப்பினரானதைத் தெரிவித்தார். பிற்கா லத்தில் தோழர் இசக்கிமுத்து கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகத் தேர்வாகி, 8 ஆண்டுகள் அப்பொறுப்பில் செயல்பட்டிருக்கிறார்.

சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் தோழர் தேவப்பிரகாஷ் கோவில்பட்டியில் பன்முகப் பணிகளில் ஈடுபட்டார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி வட்டக்குழு உறுப்பினராகச் செயல்பட்டு அந்நகரத்தில் இளைஞர்களைத் திரட்டுவதில் பங்காற்றினார். நகரத்தில் இந்திய மாணவர் சங்கத்தைத் தொட ங்குவதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. தத்துவார்த்த ஏடான ‘மார்க்சிஸ்ட்’ (ஆங்கிலம்) காலாண்டிதழ் படிகளை வரவழைத்து விநியோகித்தார்.

இவருடைய முன்முயற்சியில் கோவில் பட்டியில் இசைக்குழு ஒன்று தொடங்கப்பட்டது. அதன் நிகழ்ச்சிகளில் இவரும் ஒரு பாடகராகவும் பங்கேற்றிருக்கிறார். கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கக் (தமுஎகச) கிளையை உருவாக்கிட தோழர்கள் பால்வண்ணம் (இத்தொடரில் இடம்பெற்றவர்), ச.தமிழ்ச்செல்வன், சுந்தரவடிவேல், ஆர்.எஸ்.மணி உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றி னார். தோழர் ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி தலை மையில் கரிசல் குழு பாடிய பாடல்களைத் தொகுத்து கேசட்டாக வெளியிடுவதற்கு உதவினார்.

காப்பீட்டுக் கழகத்தின் கோட்ட பொதுச் செய லாளர் என்ற அடிப்படையில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களிடையே ஒன்றிய அர சின் நவதாராளமய பொருளாதாரக் கொள்கை யின் அரசியல் பின்னணியைக் கொண்டு செல்வதில் தேவப்பிரகாஷ் முனைப்புடன் செயல் பட்டார்.

கட்சியின் காப்பீட்டுத்துறை அரங்கில் பணி யாற்றிய பலரைக் கட்சிக்குள் கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அரங்கத்திற்கு வழி காட்டும் மாநில அளவிலான குழுவிலும் பங்க ளித்திருக்கிறார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் சில அரங்கங் களுக்கும், ஓரிரு இடைக்குழுக்களுக்கும் பொறுப்பாளராகப் பணியாற்றியதையும் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

கட்சியின் கோவில்பட்டி வட்டக்குழுவிற்கு 1986-இல் மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற தோழர் பி.சி.வி. என்றழைக்கப்பட்ட பி.சி. வேலா யுதம் இடைக்குழு செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார். இடைக்குழு உறுப்பினராக தேவப்பிர காஷ் தேர்வானார்.

பி.சி.வி. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இடைக்குழு செயலாளராக இருந்தார். தோழர் பி.சி.வி மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவராகவும், மாவட்டத் தலைவராகவும், சி.ஐ.டி.யு (CITU) மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன தலைமையின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்துத் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு என்ற சங்கத்தை உருவாக்கிட தோழர்கள் து. ஜானகிராமன், கே. ஜானகிராமன், எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட்டவர் தோழர் பி.சி.வி.

“இடைக்குழு செயலாளராகச் செயல்பட்ட தோழர் பி.சி.வி-யிடமிருந்து அமைப்புச் செயல்பாடு தொடர்பான பல அம்சங்களை நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் தேவப்பிரகாஷ்.

கட்சியின் கோவில்பட்டி இடைக்குழு மாநாட்டிற்குப் பிறகு 1988-இல் மாவட்ட மாநாடு கூட்டப்பட்டு நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அம்மா நாட்டில் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பினராக தேவப்பிரகாஷ் தேர்வானார். அடுத்த சில மாதங்களில் மாவட்டச் செயற்குழு விற்கும் தேர்வானார். அதன் பிறகு கட்சிப் பணிகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கினார்.

தலித் மக்கள் தாக்கப்பட்டபோது...

1992-ஆம் ஆண்டு திருச்செந்தூர் வட்டத்தில் எங்கோ நடந்த ஒரு சம்பவத்திற்காக நாலு மூலைக்கிணறு கிராமத்தில் காவல்துறையினர் நள்ளிரவில் தலித் மக்கள் மீது தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில், இரண்டு குழந்தைகள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். தலித் மக்களின் வீடுகளைத் தீவைத்து கொளுத் தினர். கிராமத்து தலித் மக்கள் ஊரைவிட்டே வெளியேறினர்.

இப்பின்னணியில் கட்சி மாவட்டச் செயலாள ராக இருந்த தோழர் பி. சம்பத் அக்கிராமத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மாவட்ட அளவில் இயக்கம் நடந்தது. அக்காலத்தில் மாவட்டக்குழுவிற்குக் கார் இல்லாத பின்னணியில் பலமுறை தோழர் சம்பத் அவர் களை நாலுமூலைக்கிணறுக்குத் தனது இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றவர் தேவப்பிரகாஷ். நாலுமூலைக்கிணறு மட்டுமல்ல, சாதி ஒடுக்குமுறைகள் நடைபெற்ற பல்வேறு கிராமங்களுக்கும் தோழர் பி. சம்பத் அவர்களைத் தனது வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார் தேவப்பிரகாஷ்.

தலித் மக்களுக்கு ஆதரவாகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் மாவட்ட அளவில் நடைபெற்ற கண்டன இயக்கத்தில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்றதோடு, கோவில்பட்டி வட்டத்திலிருந்து கட்சித் தோழர் களை இயக்கத்தில் கலந்துகொள்ள வைப்பதி லும் முக்கிய பங்காற்றியதைத் தோழர் தேவப்பிர காஷ் பகிர்ந்துகொண்டார்.

குடும்பத்திற்குள் இயக்கம்

தோழர் தேவப்பிரகாஷ் - ஆவுடைத்தாய் திருமணம் 1973-இல் நடைபெற்றது. இவர் களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். குழந்தை களுடைய வளர்ச்சியில் குடும்பச் சூழல், கல்விச் சூழல், சமூகச் சூழல் தாக்கத்தைச் செலுத்தும். குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் கள்தான் முதல் ரோல் மாடல். தோழர் தேவப்பிர காஷ் தொழிற்சங்கத்திலும், கட்சியிலும் தனது பங்கேற்போடு, தன் குடும்பத்தினருக்கும் தன்னு டைய அணுகுமுறையால், அரவணைப்பால் சமூகப் பார்வையை உருவாக்கி அவர்களையும் கட்சிக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றி ருக்கிறார். தேவப்பிரகாஷ் இணையர் ஆவுடைத் தாய் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் செயல்பட்டிருக்கிறார்.

இவர்களின் பிள்ளைகள் மூவருமே கல்லூரி களில் படிக்கின்றபொழுது இந்திய மாணவர் சங்கத்தின் அங்கமாக இருந்து செயல்பட்டி ருக்கிறார்கள். மூத்த மகன் தோழர் சுந்தரராஜன் மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். தற்போது கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இயங்கி வருகிறார்.

இளைய மகன் சீனிவாசராகவன் மதுரையில் கல்லூரியில் பயிலும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஒரு வழக்க றிஞராக மதுரையில் செயல்படுகிறார். வழக்கறி ஞர்களுக்கான கட்சிக் கிளை உறுப்பினராகவும் உள்ளார். மகள் ஜெயந்தி தூத்துக்குடி கல்லூரி யில் பயின்றபோது எஸ்.எப்.ஐ மாவட்டக்குழு உறுப்பினராகவும் கட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். இம்மூவரின் திருமணங்களும் கட்சித் தலைவர்களின் தலைமையில் சீர்திருத்த முறைப்படி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தோழர் தேவப்பிரகாஷைத் தூத்துக்குடிக்குக் குடியிருப்பை மாற்றுமாறு கட்சி பணித்தபோது, கோவில்பட்டி நகரில் இருந்து இடம்பெயர்ந்தார். பின்னர் தொழிற்சங்கப் பணிக்காகத் திருநெல்வேலி நகருக்கு மாற்றலாகி வருமாறு பணித்தபோது, அதையும் செய்தார். அவரது குடும்பமும், குழந்தைகளின் படிப்பு, செலவினம் ஆகியவற்றை எல்லாம் மீறி தேவப்பிரகாஷின் இயக்கப் பணிகளுக்காகத் துணை நின்றனர்.

உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து முன்னர் போன்று களமாட முடியாத ஏக்கம் இவ ருக்கு இருக்கிறது. ஆனால், உணர்வு குன்றாமல் கோவில்பட்டி ஒன்றியத்தில் கட்சி உறுப்பினராக வும், காப்பீட்டு ஓய்வூதியர் சங்க உறுப்பினராகவும் தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வரு கிறார். அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தோழர் தேவப்பிரகாஷ் அர்ப்பணிப்போடு தொடர்கிற இயக்கப் பங்களிப்பு பாராட்டத்தக்கது, பின்பற்றத்தக்கது.