ஒரு சார்பாக “தீர்ப்பு” வழங்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியாக தொடரக் கூடாது
3 Dec 2025, 2:59 pm
<p><strong>ஒரு சார்பாக “தீர்ப்பு” வழங்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியாக தொடரக் கூடாது</strong></p>
<p>பெ.சண்முகம் பேட்டி புதுக்கோட்டை, டிச.3 - தொடர்ந்து ஒரு சார்புள்ள தீர்ப்புகளை வழங்குவதாகக் கூறி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க இருப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலர் பெ. சண் முகம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடை பெற்ற கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தின் முடிவில், புதன்கிழமை மாலை அவர் செய்தியாளர்களி டம் பேசியதன் விவரம்: நீதிபதி மீது புகார் “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீர்ப்பு உள்ளிட்ட பல தீர்ப்புகளில் ஒரு சார்புள்ள தீர்ப்புகளை வழங்கி வரு கிறார். இது நீதித்துறையின் ஒழுங் குக்கு உள்பட்டதல்ல என்பதால், அவர் நீதிபதியாகத் தொடரக் கூடாது என வலியுறுத்தி, அவர் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதியிடம் புகார் அளிப்பது என கட்சியில் முடிவு செய்திருக் கிறோம்” என்று பெ.சண்முகம் கூறி னார். எம்.பி.,க்கு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை உச்சி யில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தர விடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு பாஜக மாநிலத் தலைவர், இந்து மக்கள் கட்சித் தலைவர் உள்ளிட் டோர் மிரட்டல் விடுத்து, காவல் துறையிலும் புகார் அளித்துள்ள னர். “இதனை சட்டரீதியாக எதிர் கொள்வோம். இத்தகைய மிரட்டல் போக்குகள் மீது தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். எம்.பி., வெங்கடேசனுக்கு பாது காப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். புயல் நிவாரணம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்ற வரு வாய்த் துறை அமைச்சரின் அறி விப்பு போதுமானதல்ல. ஏக்க ருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மருத்துவக் கழிவு ஆலை கந்தர்வகோட்டை தொகுதி பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கக் கூடாது என்றும், அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். கோவில் நிலங்கள் மாநிலம் முழுவதும் கோவில் களுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வோர், குடி யிருப்போர், கடை நடத்துவோ ருக்கு அந்த இடங்களை குறிப் பிட்ட தொகை நிர்ணயம் செய்து முழுமையாகக் கொடுத்து விட வேண்டும். கேரளத்தில் ஏற்கனவே அவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். சட்டப்பேரவைத் தேர்தல் 2026 சட்டப்பேரவைத் தேர்த லைப் பொருத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வென்றுள்ள கீழ்வேளூர், கந்தர்வ கோட்டை ஆகிய தொகுதிகள் உள்பட போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலைத் தயா ரித்துள்ளோம். பேச்சுவார்த் தைக்கு இன்னும் குழு அமைக்க வில்லை” என்று சண்முகம் தெரி வித்தார். பேட்டியின் போது மாநில செயற் குழு உறுப்பினர் என். பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் ஆகி யோர் உடனிருந்தனர்.</p>
