முந்தய பக்கம்

ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும்!

27 Jan 2026, 3:14 pm
ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும்!
<p><strong>ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும்!</strong></p> <p>சென்னை, ஜன. 27 - ஜி.ஆர். சுவாமிநாதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் &nbsp;செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தாரா அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிபதியாய் தனது எஞ்சிய பணிக்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்ததாகவும், தனிப்பட்ட விழுமியங்களை அடிப்படை யாகக் கொண்ட சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க வேண்டிய கடமை யை, இந்நிகழ்வு தனக்கு மீண்டும் அழுத்த மாக உணர்த்தியுள்ளதாகவும் கூறியிருந் தார். மேலும், பொதுக் கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மன தில் வைத்துக் கொள்ள வேண்டும். பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ, குணத் தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது என்று தெரி வித்தார். தொடர்ந்து, தனக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் பணிக் காலம் இருக்கும் நிலையில் முழுமையாக பணி யாற்றுவேன் என்று நம்புவதாகவும், சனா தன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சைச் சுட்டிக் காட்டியே, பெ. சண்முகம், தமது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரி வித்துள்ளார். &ldquo;சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. சாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதி ரான விழுமியங்களைக் கொண்டது. அவ் வாறிருக்க, சனாதனத்தை அடிப்படை யாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்!&rdquo; என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram