ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு செல்லும்!
6 Jan 2026, 3:29 pm
<p><strong>ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு செல்லும்!</strong></p>
<p>மதுரை, ஜன. 6 - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி யுள்ளது. இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம. ரவிக்குமார், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் ய்தார். ஆகம விதிகளுக்கு முரணான தீர்ப்பு இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவைத் தூணில் கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற உத்தர விட்டார். ஆனால், இதற்கு கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த இடத்தில் தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்றச் சொல்வது ஆகம விதிகளுக்கு முரணா னது என்று கூறியது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்தி ரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கணக்கில் கொள்ளப்படாத வலுவான வாதங்கள் கோவில் நிர்வாகம், தர்ஹா நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை வைத்த னர். தமிழக அரசுத் தரப்பில், தலைமை வழக்க றிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி பல்வேறு ஆதா ரங்களைக் காட்டி, வலுவான வாதங்களை முன்வைத்தார். எனினும், செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் தான்; அந்த தீபத்தூண் தேவஸ்தான இடத்தில் தான் உள்ளது என்றும், எனவே, அதில் தீபம் ஏற்ற லாம் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்ப ளித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். அமைதியை குலைத்ததாக அரசு மீதே குற்றச்சாட்டு அதுமட்டுமன்றி, திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்றால் அதற்கு தமிழக அரசே காரணம்; கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது பொது அமைதியை சீர்குலைக்கும் என்பது அபத்த மானது; அரசியல் காரணங்களை அடிப்படை யாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுள் ளது; அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்; சட்டம் - ஒழுங்கு பிரச்சனை என்பது அதிகாரிகள் தங்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனைக் காரணம்; தீபத் தூண் கோவில் நிர்வாகத்துக்கே சொந்தமானது; கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கோவில் நிர்வாகம் ஏற்றவேண்டும்; அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்; தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோவில் நிர்வாகத்துடன் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை; நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளின்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் அவரவர் பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம். தனி நீதிபதி சுவாமிநாதனின் அனைத்து உத்தரவுகளும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.</p>
