முந்தய பக்கம்

கோ.தாமோதரன் காலமானார்

21 Jun 2026, 2:10 am
கோ.தாமோதரன்  காலமானார்
<p><strong>கோ.தாமோதரன் காலமானார்</strong> </p><p> ராணிப்பேட்டை, ஜூன் 20- நெமிலி வட்டம் கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிபிஎம் உறுப்பினரும் , தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாநில துணைத் தலைவருமான கோ.தாமோதரன் (50) வியாழக்கிழமை (ஜூன் 18) மாரடைப்பால் காலமானார். மறைந்த தாமோதரனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்குச் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரகுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.காசிநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ.தவராஜ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ.கலைவாணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நெமிலி தாலுகா செயலாளர் ஆர்.வெங்கடேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் த.ஞானமுருகன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram