கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க முன்னாள் நிர்வாகி ஜி.தாமோதரன் நினைவேந்தல்
5 Jul 2026, 1:46 am
<p><strong>கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க முன்னாள் நிர்வாகி ஜி.தாமோதரன் நினைவேந்தல்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 4 – தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளரும், மாநில துணைத்தலைவருமான மறைந்த ஜி.தாமோதரன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா ராணிப்பேட்டையில் நடைபெற்றது. கடந்த ஜூன் 18 அன்று மாரடைப்பால் காலமான அவரது படத்தை நிர்வாகிகள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கேபிள் டிவி துறையினரின் வாழ்வாதாரப் போராட்டங்களில் செயல்பட்ட அவரது பணிகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான சங்க நிர்வாகிகள், வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.</p>
